பக்கம்:The Wedding of Valli.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 母。 வள்ளி மணம் (அங்கம்-1 அப்படியே செய்கிறேன். ஆயினும் ஒன்றுதான் என் மனத்தில் வருத்தமா யிருக்கிறது. என்ன அது ? என்னைக் கலியாணம் செய்து கொள்ளாமற் போனல் போகி றது-உன் எழிலுக்கும் புத்திக்கும் ஏற்ற கணவன் வேருெ ருவனும் உனக்குக் கிடைக்கவில்லையா? போயும் போயும் அந்த கழுகாசலபதியின் மீதுதான காதல் கொள்ள வேண் டும் நீ அவரையா கடி மணம் புரியவேண்டும் ?ே -ஐயா! என்ன என் பிராணநாதருக்குக் குறை அவரை விட உத்தமமான புருஷன் யார் இருக்கிருர் இத் திரி லோகங்களிலும் ? சொல்கிறேன் கேள். யாரையாவது கலியாணம் செய்து கொள்வதென்ருல், அவனுடைய குலம் என்ன, கோத்திசம் என்ன, தாய் தந்தையர் யார், பந்துக்கள் எப்படிப்பட்டவர் கள், இதெல்லாம் விசாரிக்க வேண்டாமா ?-இந்த கழுகா சலபதி ஜாதி ஆண்டி ஜாதி-கேரத்திரமேயில்லை-அவனு டைய தந்தை தான்தோன்றி! தலை மண்டையைக் கையில் வைத்துக் கொண்டு பிட்சை கெடுப்பவன். தாயோ (LPGA லிே சமையனே தறிதலை-அவன் சுய குணத்தை சூட்சு மமாகச் சொல்லுகிறேன் ஒரு வார்த்ை தயில்-தகப்பன் சாமி அவன்! ஐயா! வேடாே! போதும் நிறுத்தும். நான் எதையும் பொறுப்பேன்! என் பிராணநாதரை இழிவாகக் கூறிடில் அதை மாத்திரம் ஒரு பொழுதும் பொறுக்கமாட்டேன். அவருடைய பெருமை அற்ப வேடராகிய உமக்கென்ன தெரியப் போகிறது ? அவருடைய அரிய குணங்களையும் அழகையும் ஆண்மையும் அறைந்திட அந்த ஆதிசேஷனலு மாகாதென்று நான் சத்தியமாய்க் கூறுவேன். என் பெருமையைவிட அவனுக்கு அணுவளவும் அதிகம் இல்லையென்று நான் சத்தியமாய்க் கூறுவேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/43&oldid=732312" இலிருந்து மீள்விக்கப்பட்டது