பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


(உரிமையாளர் Ganesh Printing and Binding, 6, பிலிப்ஸ் தெரு, சென்னை-600 001) என் உள்ளார்ந்த நன்றியைப் புலப்படுத்து கிறேன்.

‘வெள்ளையப்பன் இல்லாது வேலை யொன்றும் நடவாது’ என்பது எல்லோரும் வாழ்வில் காணும் அநுபவம், இந்நூலை வெளியிடத் தமிழக அரசு ஐந்து ஆயிரம் வெண்பெற்காசுகளை மானியமாக வழங்கியது. எனது சிறிது சேம நிதியில் இவ்வெளியீடு மேலும் பல ஆயிரம் வெண்பொற்காசுகளை விழுங்கியது. தாள்கள் விலையும், அச்சுக் கூலியும், கட்டமைப்புச் செலவும் பெருகி யுள்ளமையே இதற்குக் காரணம். நூற்படிகளைப் பொறுப்புடன் பாதுகாப்பாக வைக்கவும்,நன்முறையில்விற்கவும்கணிசமான கழிவு தரவேண்டியுள்ளது. நூலில் மூழ்கின பல்லாயிரமும் என் கைக்கு (வட்டி இல்லாவிட்டாலும்) என்று வரும் என்ற கவலை அவ்வப் போது தோன்றுகின்றது. தமிழகத்தின் நூலக அமைப்புகளும், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களும், முதுகலைப் பட்டத்திற்கு முனைபவர்களும், ஆய்வு மாணாக்கர்களும் எனக்குத் தோன்றும் துணையாக இருப்பார்கள் என்றும், இதற்குத் தோன்றாத் துணை யாக எம்பெருமான் நிற்பான் என்றும், என் உழைப்பையும் தமிழுலகம் ஏற்க ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்றும் நம்பியே இவ்வெளியீட்டில் இறங்கினேன். ஏமாற்றம் இருக்காது என்றே கருதுகின்றேன். செலவில் ஒரு பகுதிக்கு நிதி உதவிய தமிழக அரசுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் மூலம் என் நன்றியைத் தமிழக அரசுக்குப் புலப் படுத்துகிறேன்.

பேராசிரியர் டாக்டர் வ. சுப. மாணிக்கம் என் நெடுநாளைய நண்பர்; பண்டிதமணியுடன் வைத்தெண்ணக் கூடிய பெரும் பேராசான் ‘தமிழ்க் காதல்’ கண்டவர்; அத்த தலைப்பில் ஆய்ந்து டாக்டர் பட்டமும் பெற்ற்வர். தொல்காப்பியத்திலும் சங்க இலக் கியத்திலும் ஆழங்கால்பட்டு மூழ்கி முத்தெடுப்பவர். ‘வள்ளுவத்தை’ வாழ்க்கையுடன் பொருத்திக் காட்டி வான்புகழ் பெற்றவர். இவர் படைத்த நூல்களில் ‘தமிழ்க் காதலும்’ ‘வள்ளுவமும்’ சிந்தனைக் களஞ்சியங்கள். இத்தனைக்கும் மேலாக நேர்மையும் தூய்மையும் இவர்தம் ‘அக, புற வாழ்க்கை’யின் குறிக்கோள்கள். இத்தகைய தூய உள்ளத்திடமிருந்து ‘அணிந் துரை’ பெற்றது இந்நூலின் பெரும் பேறு; என்னுடைய பேறு மாகும். அணிந்துரை வழங்கிய அன்பருக்கு அகங்குளிர என் நன்றி உரித்தாகும்.