பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணக்குன்றன் 145

(3) சாம்பவான் அதுமனை நோக்கி, அவனைப் புகழ்ந்து, 'உம்மால்தான் கடலைக் கடந்து பிராட்டியைக் கண்டு திரும்ப முடியும் என்று கூறும்போது, அநுமன் முகந்தாழ்ந்து கூப்பிய கையனாய் இசைவு தெரிவிப்பதில் இந்த அடக்கப் பண்பைத் தெளியலாம்.

மேலும், "இந்தச் சிறிதாகிய கடலையேயன்றி ஏழு பெருங்கடல்களையும் கடக்க வேண்டுமென்றாலும் அவ்வாறே செய்து பிராட்டியை மீட்கும் வல்லமை யுடையவர் பலர் இருக்கவும், அடியேனை ஏவியது அடியேனது பெரும்பேறு” " என்கின்றான். இஃது அவையடக்கம் போல் கூறியது; பெரியோர்கள் நிறைந்த இடத்தில் ஒருவன் தன்னைத் தானே தாழ்த்திடக் கூறுவது அவையடக்கம் எனப்படும் வைணவப் பெரியார்கள் இதனை 'நைச்சியாது சந்தானம்' எனப் பகர்வர்.

"இலங்கையை வேரோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றாலும், இடையூறு விளைவிக்கும் அரக்கர்களையெல்லாம் வேரோடும் அழித்துப் பிராட்டியை எடுத்துக்கொண்டு வருமாறு பணித்திட்டாலும் நீங்கள் சொன்னபடியே செய்து முடிப்பேன்; அதனைக் கண்கூடாகக்

காண்பீர்கள்' "

"திருமால் உலகளந்தது போல இங்கிருந்து இலங்கை வரையிலுள்ள ஒரு நூறு யோசனை தூரமும் ஒரடி வைப்புக்குள் அடங்கும்படி எளிதாகத் தாண்டி, இந்திரன் முதலிய தேவர்கள் அரக்கர்க்கு உதவியாக வந்து எதிர்த்துப் போரிடினும், இலங்கையில் வாழும் அரக்கர்களையெல்லாம் அடியோடு அழித்து நினைத்தது முடிப்பேன்.""

"கடலானது இவ்வுலகை அழிக்கும்பொருட்டுப் பொங்கி வழிந்தாலும், இவ்வண்டமே உடைந்து விண்ணில் சென்றாலும், அடியேன் சிறிதும் பின்வாங்காமல் உங்களுடைய ஆசியால் சக்கரவர்த்தித் திருமகனின்

9. கிட்கிந்தை - மயேந்திரப் - 21 10. கிட்கிந்தை - மயேந்திரப் - 22 1. கிட்கிந்தை - மயேந்திரப் - 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/146&oldid=1361332" இலிருந்து மீள்விக்கப்பட்டது