பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அன்பு அலறுகிறது

அதற்குள், கொஞ்சம் பொறுடி! சரிந்து விழுந்த மேலாக்கைக்கூட இன்னும் நீ சரியாக எடுத்துப் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறாயே?" என்று காந்தா ஓடோடியும் வந்து, என் மேலாக்கை எடுத்துப் போட முயன்றாள்.

"தாங்க்ஸ்!” என்று அவளுக்கு முன்னால் நானே அதை எடுத்துப் போட்டுக் கொண்டு மேலே நடந்தேன். அவள் விடவில்லை; ஐயோ, இதென்னடி?” என்று எனக்குக் குறுக்கே வந்து நின்றாள். என் கன்னத்தைத் திருப்பிப் பார்த்தாள். பிறகு, “அநியாயம், அநியாயம்! என்னதான் ஆசையிருந்தாலும் இப்படியா கிள்ளுவார்கள்?” என்று வாயைப் பிளந்தாள்.

"நீ ஒண்னு கிள்ளவில்லையடி; கடித்திருக்கிறார்!" என்றாள் சாந்தா, அதை மறுத்து.

நான் சளைக்கவில்லை; "ஏனடி, பல்லில்லாத கிழவரால் எங்கேயாவது கடிக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டு மேலே நடந்தேன்.

அடுத்தாற்போல் ஒருத்தி ஓடோடியும் வந்த' "இங்கே வாடி, ஒரு ரகசியம்!” என்றாள், என் காதோடு காதாக.

"என்ன ரகசியம்?" என்றேன் நான் திரும்பி.

"கதவை முதலில் தாளிட்டது யாரடி , நீயா அவரா?”

"அதுவா, அது எனக்கு ஞாபகமில்லை!”

"பேச்சை முதலில் ஆரம்பித்தது யாரடி, நீயா அவரா?”