பக்கம்:அன்பு மாலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அன்பு மாலை

ஈனமுறல் உண்டோ?மற் றதற்குமுடி வுண்டோ?
இந்நாளில் ஒருஞானி தனைக்காண வேண்டின்
சானமுறல் வேண்டாம்நல் லருணைதனில் சென்றே
சார்ராம சுரத்குமார் எனுமவனைக் காண்மின். 141

சானம் - தியானம்.

திண்ணமுறா நெஞ்சகத்தில் சாந்தியுறல் வேண்டின்
சிறுகின்ற சினமென்னும் பகைகடிய வேண்டின்
எண்ணமெலாம் அலைக்கின்ற கவலையறல் வேண்டின்
எழும்காமப் பெரும்பகையை அழித்திடவேவேண்டின்
நண்ணுபகை யாகின்ற பொல்லாத குணங்கள்
நாள்நாளும் நலியாமல் இருப்பதற்கு வேண்டின்
மண்ணுலகில் அருணதனில் வம்மின்:நீர் அங்கே
வளர்ராம சுரத்குமார் திருவடியில் வீழ்மின். 142

திண்ணம் உறுதி.

நாய்வந்து வாலாட்டும்; மனிதர்கள் வந்தே
நல்லனிவன் என்றடியில் வணங்கியே நிற்பார்;
தாய்வந்த தன்மைபோல் அன்பினால் வந்தார்
தாமுண்ணப் பாலருள்வான்; தயிருமருள் கின்றான்;
பேய்வந்த கோலத்தில் இருக்கின்ற மனத்தைப்
பிசைந்தெடுத்துச் சாந்தியினால் அபிஷேகம் செய்வான்:
சாய்கின்ற நிலையின்றி நிலைநிறுத்தி வைப்பான்;
சாற்றுபுகழ் ராமசுரத் குமாராகும் யோகி. 143

நாய் - சாய்பாபா என்ற நாய்.


ஆணவமாம் பகைபோக்கி மாயையெனும் பேயை
அடியோடே அழித்துவிட்டான்; காமமெனும் பகையை
நீணுதல்இல் லாதபடி வித்தோடே கருக
நிமிர்கின்றான்; வந்தவர்க்குக் கருணைமொழி ஈந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/62&oldid=1460018" இலிருந்து மீள்விக்கப்பட்டது