பக்கம்:அன்பு மாலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

அன்பு மாலை


அருணை நகர் தனில்வாழும் அரனார் வாழி!
அவன்புடைசேர் என்னம்மை என்றும் வாழி!
கருணைமிகும் முருகேசன் கழல்கள் வாழி!
கார்சுரந்த கருணையொடும் அன்பர்க் கெல்லாம்
தெருள்சுரக்கும் ராமசுரத் குமார்தான் வாழி!
திண்ணமுறும் நெஞ்சகத்தோ டவன்பால் சென்றே
அருள்நயக்கும் அன்பரெல்லாம் வாழி வாழி!
அகிலாண்டம் யாவையுமே வாழி வாழி!

157


(28-11-79 அன்று பாடியவை)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


காமம் அகற்றும் திருவுளமும்
கசடு நீக்கும் திருமொழியும்
சேமம் பயிலும் நற்பண்பும்
சிவமே பயிலும் திருவுருவும்
நாமம் ராம சுரத்குமார்
என்னும் நலமும் நயக்கின்ற
பூமன் அருணை நகரினிலே
பொலிந்தான் வந்து வணங்குமினே.

158


கசடு - குற்றம், சேமம் - பாதுகாப்பு.


பாகை அணிந்த திருத்தலையான்;
பல்கால் சிரிப்போ மிகமுழங்கும்
ஏகன்; மூவா நிறைதாடி
இலங்கும் பெருமான்; எந்நாளும்
சேர்கம் தீர்க்க வல்லவனாம்
தூயன்; அடியார் பாலருளும்
தாகன், ராம சுரத்குமார்
தாளை வந்து சாருமினே.

159

பாகை - தலைப்பாகை, மூவா- மூப்பில்லாத, தாகன்-வேட்கை உடையவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/67&oldid=1303504" இலிருந்து மீள்விக்கப்பட்டது