பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், வீழ் தாள் தாழைப் பூக் கமழ், கானல், படர் வந்து நலியும் சுடர்செல் மாலை, நோய்மலி பருவரல் நாம் இவண் உய்கம்; கேட்டிசின் - வாழி, தோழி, - தெண் கழி வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா வலவன் கோல் உற அறியா, உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

- கீரங்கீரனார் நற் 78 "தோழியே! வாழி கேள், கொல்ல வல்ல சுறாமீன் வழங்கும் விளக்கமான நிறங் கொண்ட பெரிய கழியில் நீலமணிபோல மலர்ந்த நெய்தலின் சிறந்த மலர் நிறையும் படி பொன் போன்ற நுண்ணிய தாதினைப் புன்னை மரம் துவும். விழுது ஊன்றிய தாழையின் பூ கமழும். அவ்வாறாய கானலில் ஞாயிறு மறைந்த மாலைக் காலத்தில், காதல் நினைவால் உண்டான துன்பம் வந்து வருத்தும். இந் நோய் மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்வோம். தெளிந்த கழியில் பெருமை வாய்ந்த தேர் ஆழியின் உள்வாய் வரை அமுங்கினாலும், தேர்ப் பாகன் தாற்றுக் கோல் பட்டறியாத அழகிய கலன் அணிந்த - பறவை நிமிர்ந்தது போலச் செல்லும் குதிரை பூட்டிய பரந்த நீர்ச் சேர்ப்பன் தேரின் மணிக்குரல் கேட்பாயாக’ என்று பொருள் தேடச் சென்ற தலைவன், தலைவியிடம் வருவதைத் தோழி கூறினாள்.

186. விழித்ததும் கனவின்பம் போயிற்று

உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, அது கழிந்தன்றே - தோழி, - அவர் நாட்டுப் பனி அரும்பு உடைந்த பெருந் தாள் புன்னைத் துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்