பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

117


"புன்னையின் மேல் வளைந்த கரிய கோட்டின் பெரிய கிளையில் புதிய வெண்குருகு உட்கார்ந்து ஆர்த்தல், ஆய் அண்டிரன் வண்மையினாகிய களிப்புள்ள நாளவையில் பரிசில் பெற்ற அழகு செய்தமைத்த நெடிய தேரின் ஒலி போல ஒலிக்கும். அவ்வாறான தண்ணம் துறைவனின் துதாக வந்த பயனுக்குத் தக்கபடி கூறும் கேள்வியையுடைய துன்பம் தீர்ந்த பாணனே, உன் வாயின் மெல்லிய மொழிகள், பல மாண்புள்ள புது ஞாழல் மலரோடு புன்னை மலரும் மணம் கமழும் கானலில் மாட்சிமைப்பட்ட நலம் இழந்த, அழகிய முன் கையில் ஒளியுள்ள வளையல்களை அணிந்த இள மகளின், பிறைபோன்ற அழகிய நுதலில் உண்டாய பசப்பைக் களைய மாட்டா, எனவே மீண்டு செல்க' என்று வினைமுற்றி வந்த தலைவன் பாணனைத் துரதாய் அனுப்பத் தோழி மறுத்துக் கூறினாள்.

209. வேறு நிழல் உண்டன்றோ? விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, ழறந்தனம் துறந்த தாழ் முனை ஆகைய, நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது, நுவ்வை ஆகும் என்று, அன்னை கூறினள், புன்னையது நலனே - அம்ம! நானுதும், நும்மொடு நகையே, விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் துறை கெழு கொண்க, - நீ நல்கின், நிறைபடு நீழல் பிறவுமார் உளவே. - ஆசிரியர் ? நற் 172 "புதிய பாணர் பாடும் மெல்லிய இசைபோல வலம்புரிச் சங்கு ஒலிக்கும் விளங்கிய நீர்த்துறை பொருந்திய கொண்க, யாம் தோழிமாரோடு விளையாடும்போது வெண்மையான மணலில் புதைந்து மறந்து கைவிட்ட புன்னை மர விதை முளைத்து வெளி வந்தது அதற்குத் தேன் கலந்த இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அது வளர்ந்து மரமாகியது. அப்போது அன்னை, நும்மிலும் சிறந்தது புன்னை; அது தும் தங்கையாகும்’ என்று புன்னையது சிறப்பைக் கூறினாள்