பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பராரை வேம்பின் படு சினை இருந்த குராஅற் கூகையும், இராஅ இசைக்கும்; ஆனா நோய் அட வருந்தி, இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ, பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் நற் 218 “ஞாயிறு மேற் திசையில் இறங்கிக் கதிர் மழுங்கியது. பூவுதிர்ந்த கொடிபோல, இரவும் தனிமை அடைந்தது. வெள வாலும் எல்லாப் பக்கமும் பறக்கும். ஆந்தைச் சேவலும் மகிழ்ச்சி அடைந்து நகைக்குந் தோறும் கூவும். குறையாத பொருட் காதலொடு வழியிற் செல்லத் துணிந்தவர் சொல்லிய காலம் கழிந்தது. மிகவும் பருத்த அடி மரத்தையுடைய வேம்பின் பெரிய கிளையில் இருந்த கொடிய குரலையுடைய கூகையும் இரவில் கூப்பிடும். தீராத காம நோய் துன்புறுத்த வருந்தி, இன்னும் தமியேனாய் இருந்து, பருத்த அடி மரத்தை யுடைய பனை மடலிலே இருக்கும் அன்றில் பறவையின் குரலையும் நான் கேட்க வேண்டும் போலும்?” என்று திருமணம் நீட்டித்த வழி பொறுத்திரு” என்ற தோழிக்கு வருந்தி தலைவி மொழிந்தனள்.

223. மகிழ்வித்தவன் மகிழ்விக்க வருவான்!

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் பழ நலம் இழந்து பசலை பாய, இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னது உம் புலவேன் வாழி - தோழி! - சிறு கால் அலவனொடு பெயரும் புலவுத்திரை நளி கடல் பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன் தான்ே யானே புணர்ந்தமாறே.

- தாயங்கண்ணனார் நற் 219 "தோழி, வாழி. என் கண்ணும், தோளும், குளிர்ந்த மணக்கும் கூந்தலும் பழைய அழகை இழந்து, பசலை பரவி