பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந் தாது உதிரப், புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, அம்பல் மூதூர் அலர் எழச், சென்றது அன்றோ, கொண்கன் தேரே.

- உலோச்சனார் நற் 249 "இரும்பு போன்ற கரிய கிளைகளையுடையது புன்னை மரம். நீலம் போன்ற பசிய இலைகளை எங்கும் உடையது அம் மரம். வெள்ளி போன்ற விளங்கிய பூங்கொத்துகளை கொண்டதாயிற்றே. பொன் போன்ற நறுந்தாது அம் மரப் பூங்கொத்தின் நடுவில் இருக்கும். அந் நறுந்தாது உதிரும். புலியின் புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரிகள் அமைந்தவை வண்டு கள் அவை ஊதலால் இது புலியோசையோ என்று தேரிற் பூட்டிய குதிாைகள் அச்சமுறும் அவற்றைப் பலமுறை இழுத்து நிறுத்தியும் நில்லாது குதிரைகளின் விளங்கிய கால்கள் பந்து போலத் தாவும். அக் குதிரைகள் பூட்டிய காதலன் தேர், வளப்ப மிக்க நம் சேரியிலே கல் என்னும் படி ஒலி தோன்றி அம்பல் மூதூரில் பழி எழ நில்லாது சென்ற தன்றோ? இனி வருவாரோ யாதோ?” என்று மணத்திற்குப் பொருள் தேடச் சென்ற தலைவனை எண்ணி மெலிந்து உரைத்தாள் தலைவி

231. படுக்கைக்குத் துணை உண்டு வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், குன்று ஒங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், துனி நல் நல்மொழி இனிய கூறியும், சொல் எதிர் பெறஅய் உயங்கி, மெல்லச் செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்