பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

155


ஊரே, ஒலி வரும் கம்மையொடு மலிபுதொகுபு ஈண்டி, கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; கானே, பூ மலர்களுலிய பொழிய அகம்தோறும் தாம்அமர் துணையொடுவண்டு இமிரும்மே; யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு கனை இருங் கங்குலும் கண்படை இலெனே! என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? அதனால், உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?

- வெள்ளிவீதியார் நற் 348 "நிலவு, நீல நிற வானத்தில் வெண்ணிறமான பல கதிர் களையும் பரப்பிப்பால் நிறைந்த கடல் போலப் பரந்து பட்டது. ஊர், ஒலிக்கூட்டத்தோடு மக்கள் நிறையச் சேர்ந்து திரண்டு ஆரவாரமான தெருக்களில் திருவிழாக் கொண்டா டும். காடு, அழகிய மலர்கள் நிரம்பிய பொழில்கள் தோறும் வண்டுகள் தாம் விரும்பிய துணை வண்டுகளோடு ஊதும். யான்: புனைந்த அணிகலன் நெகிழுமாறு செய்த தனிமைத் துயரத்தோடு மிக நீண்ட இராப்பொழுது முழுதும் கண் உறங்காமல் இருக்கின்றேன். அதனால் இவ் உலகம் என்னைத் தாக்கிப் போர் புரியுமோ? உலகத்தோடு என் துயருற்ற நெஞ்சம் போர் செய்யுமோ? அறியேன்” என்று வேட்கை மிகுதியின் ஆற்றாமையால் தலைவி உரைத்தாள்.

256. பரதவர் மகள் என்ன நினைப்பாளோ? கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், கொடுங் கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும், கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு கைவலும் இணையம் ஆகவும், செய்தார்ப் பகம் பூண் வேந்தர் அழிந்த பாசறை, ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத பெரும் புண்ணுறுநர்க்குப் போய் போலப்,