பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தண் நறுங் கானல் வந்து, நும் வண்ணம் எவனோ? என்றனிர் செலினே?

- முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன் அக 30 நெய்தல் நிலப் பரத மக்கள் இளையரும் முதியவருமாய்த் தம் மக்களுடன் வந்து நெருங்கித் தத்தம் காதல் துணை வருடன் கூடிய மகிழ்ச்சி பெற்றவராய் உப்பு மூடைகளை ஏற்றி உப்பு வாணிகர் கடத்தற்கரிய துறைகளில் செலுத்துகின்ற வண்டிகளில் பூட்டிய வலிய எருதுகளைப் போல் ஒன்றாய்க் கூடுவர் கடலின் பேரொலியும் அடங்கும்படி ஆரவாரம் செய்து, நீண்ட கயிற்றால் பின்னிய குறுகிய கண்களையுடைய வலைகளை வீசிப் பலவகையான மீன்களைப் பிடிப்பர் மணல் மிக்க கரைகளில் அம் மீன்களை ஒலி உண்டாக இழுப்பர் பெரிய நெற்களத்தில் குவித்த உழவர்களைப் போலத் தம்மிடம் வந்து இரந்தவர்களின் வறிய பாத்திரங்கள் நிறைய அம் மீன்களைத் தருவர் எஞ்சிய மீன்களைப் பல கூறுகளாகச் செய்து விலை கூறி விற்பர். பின் கரை உயர்ந்த திண்ணிய மணற் பரப்பில் உறங்குவர் இத்தகைய இயல்புடையார் தலைவனே கழுவப்படாத முத்துகளைப் போன்று அரும்புகள் அரும்பியுள்ள புன்னை மரங்கள் அடர்ந்த குளிர்ந்த நறு மணம் வீசுகின்ற கடற்கரைச் சோலைக்கு ஒருநாள் நீவிர் வந்து, அங்கு விளையாடும் எங்களைப் பார்த்து, "உம் அழகு என்ன வாயிற்று?’ என்று வினவிவிட்டுச் சென்றால் உன் பெருமை என்பது கெட்டுப் போகுமோ? நீ வாராதிருக்கக் காரணம் யாது? என்று பகற்குறி தலைவனிடம் தோழி வினவினாள்

273. சென்ற நெஞ்சம் திரும்பாதிடுக கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி குவை இரும் புன்னைக் குடம்பை சேர, அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, தாழை தளரத்துக்கி, மாலை அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இணைய,