பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

187


ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, பறைஇ தளரும் துறைவனை, நீயே, சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால் கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் கடற் சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, 'நின்உறு விழுமம் களைந்தோள் தன்.உறு விழுமம் நீந்துமோ எனவே,

- மதுரைக் கள்ளிற் கடையத்தன்,வெண்ணாகனார் அக 170

நண்டே, கரிய இந்தக் கழியில் ம்லர்ந்திருக்கும் மங்கை யரின் கண்களைப் போன்ற நெய்தற் பூவின் இதழ் நறு மணத்தை அமிழ்தம் என்று விரும்பிச் சென்று குளிர்ந்த மகரந்தத்தை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிகுதியால் பறப்பதற்கு இயலாது தளரும் இவ் இயல்பு வாய்ந்த துறையை உடையவன் தலைவன். அத் தகையவனுக்கு கடற்கரைச் சோலையும் போய்க் கூறாது உப்பங்கழியும் கூறாது. வண்டுகள் ஒலிக்கும் நறுமணமுடைய மலரும் சொல்லாது எனவே உன்னையே அல்லாது வேறு துணையும் எனக்கு இல்லை. தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் விரும்பும் பெண் பறவை யுடன் வருத்தமுடன் தளர்ந்திருக்கும் சிறிய கடற் காக்கை பரதவர் மீன் வேட்டையாடலைச் செய்யாது சோம்பி யிருக்கும் காரணத்தால் சுறாமீன் திரியும் கடற்பரப்பில் இறால் மீனைப் பிடித்துத் தின்பதாய்க் கனவு காணும் அத் தகைய நள்ளிரவில் வந்து பல நாளும் நினது துன்பத்தைப் போக்கியவள் தலைவி அத்தகையவள் உன் பிரிவால் அடைந்த மிக்க துன்பத்தைக் கடக்க வல்லவளோ? என்று, அத் தலை வனிடம் போய் நீதான்் சொல்ல வேண்டும் என்று தலைவி மிக்க காதலுணர்வை மொழிந்தாள்.