பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ

பூனி இருள் சூழ் தரழைதல் அம் சிறு குழல்இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய தனியவர் இடும்பை கண்டு இணைதியோ? எம் போல இனிய செய்து அகன்றாரை உடையையோ? - நீ என ஆங்கு அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட, பெரும் தேறுதல் களைமதி, பெருமl வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் மருந்து அறை கோடலின் கொடிதே, யாழ நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடனே. - கலி 129 பல உலகங்களில் உயிர்கள் எல்லாம் பழைய ஊழிக் காலத்தில் பிறந்து இறந்து தடுமாறித் திரியுமாறு நான் முகனாய் நின்று படைத்தவன் இறைவனான முதல்வன் அவன் பின் அரசனாய் அந்த உயிர்கள் எல்லாம் தன்னிடம் வந்து' சேர்ந்து குவியும்படி விரும்பும் ஊழி முடிந்த காலத்தில் தன்னிடத்தில் மீட்டு ஒடுக்கிக் கொள்வான் அந்த முதல் வனைப் போன்று ஞாயிறு பகற்பொழுது வந்து சேர்வதற்குக் காரணமான தன் கதிர்களைத் தன்னிடம் மீட்டு ஒடுக்கிக் கொள்வான். தன் கதிர்களைத் தன்னிடம் மீட்டுக் கொணர்ந்து மறைத்தலால், நல்ல நீதிநூல் வழியில் உலகை நெறியில் நிறுத்தி அந்த உலகை ஆண்ட மன்னன் போன பின்பு நீதி யற்றதை மேற்கொண்டு அறநெறியை உலகில் நிறுத்த மாட்டாத குறுநில மன்னனின் காலம் போல், இருள் உலகத்தில் வரும் பொருட்டுப் பகற்போதுக்கு ஓர் எல்லை யான வருத்தம் மிக்க மயங்கிய மாலைக் காலத்தில், பரவும் திரை ஒலித்தல் மாறாத பரவிய நீரை உடைய கடலே! துறைவன் எமக்கு வன்மை இல்லாதபடி துறந்தான்் என்று அவன் கூற்றால் உண்டான காம நோய் சுடுதலால் அதில் மூழ்குபவரிடத்தில் நின்று வருத்த வேண்டும் என்பதால் ஒலிக்கின்றாயோ? முன்பு காதல் செய்து பின்னர் நீங்கியவரை எம்மைப் போல் நீயும் பெற்றிருப்பதால் வருந்துகின்றாயோ?