பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

273


நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப; இணையும் என்நெஞ்சம்போல், இனம்காப்பார் குழல் தோன்ற, சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப, போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய, காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை மாலையும் வந்தன்று, இனி.

இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய் அருள் இலை; வாழி! சுடர்! ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின் மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து வேண்டிய வேண்டியாங்க எய்துதல் வாய்எனின், யாண்டும், உடையேன் இசை. ஊர் அலர் தூற்றும் இவ் உய்யா விழுமத்துப் பீர் அலர் போலப் பெரிய பசந்தனநீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று, பேர் அஞர் செய்த என் கண். தன் உயிர் போலத் தழிஇ, உலகத்து மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என்கொலோஇன் உயிா அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும் என் உயிர் காவாதது?

என ஆங்கு மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள், பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர, தென்னவற் தெளித்த தேஎம் போல, இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே. - கலி 143

“பெரிய ஊரிலிருந்து கன பில் அவனுடன் புணர்ந்து இன்பம் அடைந்த காலத்து, இரவில் இருள் நீங்க விளங்கிய நிலவொளியை உடைய திங்கள் போன்று விளக்கம் பொருந்தி அவன் அகன்று போன பின்பு, பகற் பொழுதில் ஒளி குன்றிய மதியைப் போல் ஒளி கெட்டு நெற்றியின்று போன திலகம் உடையவளாக நீலமணியைத் தன் ஒளிவிட்டு மாறுபடும்