பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தேடிச் சென்றும் எம் கணவரைக் காணப் பெறவில்லையோ' என்ச் சொன்னாள் அவளுக்கு ஏற்பட்ட வருத்தமானது, தன் துயிலை வாங்கிக் கொண்டு தன்னை நினையாதவரைத் தன்னிடம் வரக்கண்டு, அவர் மார்பிடத்தே திருமாலின் மார்பில் திருமகள் சேர்ந்தாற் போல் சேர்ந்தாள் அவ்வளவில் ஞாயிற்றின் முன் இருள் கெடுவது போல் அவள் துன்பம் கெட்டது. ஆகவே இவள் பசலை அடைந்த வருத்தத்தில் கடவுள் உதவித் தீர்த்தாற் போல அவரும் உதவித் தீர்த்தார்” எனக் கண்டவர் வியந்து தமக்குள் கூறிக் கொண்டனர்

337. அல்லல் தீர்ந்தது உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே வரைநில்லா விழுமம் உறீஇ நடுக்குஉரைத்து, தெறல்மாலை அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர, அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன் துன்னி அகல, துறந்த அணியளாய் நானும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு, பேர் அமர் உண் கண் நிறை மல்க, அந் நீர் தன் கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர, தேர் வழி நின்று தெருமரும் ஆயிழை கூறுய கேளாமோ, சென்று? 'எல்லிழாய் எற்றி வரைந்தான்ை, நானும் மறந்தாள்’ என்று உற்றணிர் போல, வினவுதிர் மற்று இது கேட்டிமின், எல்லீரும் வந்து. வறம் தெற மாற்றிய வானமும் போலும்; நிறைந்து என்னை மாய்ப்பது ஒர் வெள்ளமும் போலும்சிறந்தவன் து அற நீப்ப, பிறங்கி வந்து என்மேல் நிலைஇய நோய், நக்கு நலனும் இழந்தாள், இவள் என்னும் தக்கவிர் போலும் இழந்திலேன்மன்னோமிக்க என் நானும், நலனும், என் உள்ளமும், அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன! உக் காண்-இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக