பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யும் உறங்கச் செய்யும் இராக் காலமே! நீ மிகவும் வருத்தி உறக்கம் கொள்ளாய் ஆகவே என் நோயை உனக்குச் சொல்லேன்” என்றும் கொடுமை சொல்கின்றவர்களை நோக்கிச் சொன்னாள்

“பின்பு திங்கள் வருத்தும் என உணர்ந்து உலகத்தில் உள்ளவரால் அவ் வானத்தில் இளம்பிறைப் பருவத்தில் எதிர் கொள்ளப்பட்டுப் பின்பு முதிர்ந்து நான் உறங்காமல் என்மீது வந்து வளைத்த மதியும், நான் அடைந்த கொடிய நோயை முறையாய்ச் சொன்னால், தனது கதிர்கள் ஒளி மழுங்கி நடுங்குவது போல் ஒடி மிகவும் சுழன்று திரியும் ஆதலால் உமக்கன்றி அதற்கும் என் நோயைத் கூறேன்” என்றும் சொன்னாள்

அப்படிச் சொல்லிப் “பெரிய ஊரின் தெருவிலே நான் அடையும் வருத்தத்துக்குக் கழுவாயாக எதையும் செய்யாமல் பெரிய உறக்கத்தைக் கொள்ள எண்ணிய சான்றோரே, என் உடலில் நின்று எரியும் காம நோய், மழையெல்லாம் என்னிடத்தே பெய்தாலும் ஆறுவதுபோல் இல்லை! இது தணியும்படி உலகத்தில் உள்ள நீரை என்னிடம் நிறையுமாறு அடைத்து வைத்து என் உயிரைக் காப்பீராக” என்றும் சொன்னாள்

பின்பு தன் நோயின் செய்தியைச் சொல்பவள் “அவன் நெஞ்சில் நீங்காமல் இருப்பினும் அதனால் அமையாமல் காந்தும் அவன் ஒருகால் சென்றால், தான்். அதற்கு வருத்தம் அடையும் அவ்வாறு என் மனம் வருந்துதலை ஆற்ற முடி யாமல் பலவுறுப்புகளையும் கூட்டி இயக்கும் ஒரு பொறி யாகச் செய்த பாவைபோல் துன்பத்துள் அழுந்தித் தணியா என்னிடத்து உண்டான துன்பமானது, மற்றவரால் அழிப்ப தற்கு அரிய அரண் போன்ற தன்மையை உடையது இந்த அரணை அழித்தற்கான வழியை ஆராய்வீராக” எனவும் இயம்பினாள்

என அங்குச் சொல்ல, "கோடைக்காலம் பெரிய வானில் முகிலின் வளவிய மழைத்துளியைப் பெறுவதற்குச் சுழன்று திரியும் வானம்பாடிப் பறவைக்கு அம் முகில் பெய்தாற் போல், தன்னுடைய நல்ல அழகையுடைய மார்பன் அருளி வந்து