பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

51


வந்தேன். இரவு வருதலும் ஆரல் மீனை அருந்திய வயிற்றை உடைய நாரைகள் என் மகளாகிய அப் பாவையின் நெற்றியை மிதிக்கும். யாம் போகின்றோம். தலைவியையும் அவ் இடத்திற்குப் போகும்படி நீயே பணிவிப்பாயாக!” என்று தோழி தலைவியிடம் தலைவன் செல்லும்படிக் குறிப்பால் உணர்த்தினாள்

12. வளையலை அணிந்து விழிகளை மறைப்போம்

மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ருெண்டு கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் வாராது அமையினும் அமைக! சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

- குன்றியனார் குறு 117 "தோழி! மாரிக் காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தையுடைய கொக்கினது பார்வையைக் கண்டு அஞ்சிய ஈரமான உடல் உடைய நண்டு, தாழை வேரினி டையே உள்ள வளைக்குள் செல்லும் பொருட்டு, இடைய ரால் கட்டப் பெற்ற கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரைந்து செல்லுதற்கு இடமாகிய கடல்துறையை உடைய தலைவன் இங்கு வாராது போயினும் போகுக அவன் வாராமையினால் நின் உடல் மெலிவுற்றுக் கைகளில் உள்ள வளைகளை இழப்பினும் மேனி மெலிவு புலப்படாமல் செறிந்து நிற்பதற்குரிய கைவளைகளும் வளையல் விற்ப வரிடம் உள்ளன” என்று தலைவிக்கு கூறினாள்.

13. அன்பில்லா மாலைக்காலம்

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நார் இல் மாலைப் பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளிரோ? எனவும் வாரார் தோழி! நம் காதலோரோ. - நன்னாகையார் குறு 18