பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க. ஆதலின் நீயும் அச் சிற்றுாரினிடத்துச் செல்லுதலைத் தவிர்க” என்று தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவன் தெரிவித்தான்்

125. என் நிலையை உணர்ந்திலர்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் படர் சுமந்து எழுதரு பையுள் மாலை, யாண்டு உளர்கொல்லோ, வேண்டுவினை முடிநர்? 'இன்னாது, இரங்கும் என்னார் அன்னோதைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் செய்வுறு பாவை அன்ன என் மெய்பிறிதாகுதல் அறியாதோரே. - தேரதரன் குறு 195 "தோழியே! தடவுதல் போல் அசைந்து வரும் இனிய காற்று உடம்பினிடத்தே தீண்டிப் பரவ, அதனால் அலங் கரிக்கப் பெற்ற பாவையைப் போன்ற என் மேனி வேறுபாடு உடையதாதலை அறியாதவராகிய தலைவர், தாம் விரும்பிச் சென்று கருமத்தை முடித்துக் கொள்வாராய்க் கதிரவன் வெம்மை நீங்கி மேற்கு மலையை அடைய நினைவு கூறும் துன்பத்தை மேற்கொண்டு, மாலைக் காலத்துத் துன்பத்தை யும் தாங்கி எங்கு இருக்கின்றனரோ? அத்தோ! துன்பம் தருகின்ற இம் மாலைக் காலத்தில் தலைவி வருந்துவாள் என்று நினையாதவர் ஆயினர்” என்று தலைவி தோழியிடம் வருந்திக் கூறினாள்.

126. கொல்ல வரும் கூதிர்பருவம்

யாது செய்வாம்கொல் - தோழி - நோதக நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவின் கூற்றம் காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?

- கச்சிப்பேட்டு நன்னாகையார் குறு 197 "தோழி! நான் நோகும்படியாக, நீரை ஏற்றுக் கொண்டுள்ள மின் இடி முதலிய தொகுதிகளை, உடைய