பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

67


தழையினும், உழையின் போகான்; தான்் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.

- அஞ்சில் ஆந்தை குறு 294

"கடலினிடத்தே ஒருங்கே நீர் விளையாட்டுப் புரிந்தும், கடற்கரைச் சோலையினிடத்தே தங்கியும், மாலையை உடைய மகளிர் கூட்டத்தோடு குரவைக் கூத்து ஆடியும், அயலாரைப் போல விரைவாக வந்து தலைவன் தழுவிச் செல்வான் ஆயினன். அதனால், அலர் உண்டாயிற்று; அஃது இப் பொழுது கழிந்தது. இப்பொழுது அங்ங்னம் செய்யாமல் தேமல் படர்ந்த விரிந்தகன்ற அல்குலினது திருத்தமாகச் செய்யப்பட்டுள்ள அணிகலன்கள் அசைதலை உடைய பக்க மாகிய அரையினிடத்துக் கட்டிய பசிய தளிரால் செய்த தழையைக் காட்டிலும் மிக அணிமையில் இருந்து போகா \னாய் இருந்த காரணத்தினால் தாய் நம்மை இற் செறித்துக் காவல் செய்யும் நிலைக்கு ஆளாக்கினாள்” என்றாள் தலைவி தோழியிடம்.

142. கூறவேண்டாம் அவனிடம்

அம்ம வாழி - தோழி - புன்னை அலங்குசினை இருந்த அம் சிறை நாரை உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் கள் நாறுநெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணம் துறைவன் காணின், முன் நின்று, கடிய கழறல் ஒம்புமதி தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ? என்றனை துணிந்தே.

- பெரும்பாக்கன் குறு 29.6 "தோழி, ஒன்று கூறுவன் கேட்பாயாக புன்னையினது அசைந்த கிளையினிடத்து இருந்த அழகிய சிறகை உடைய நாரை, மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்த தாயின், வயலில் உள்ள கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு விரும்புகின்ற தண்ணிய அழகிய தலைவனைக் கண்டால் அவன் முன்னே நின்று, வளையை அணிந்த தலைவி இத் தன்மை பெற்றவளாகும்படி பிரிந்து செல்லுதல்