பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


படியான உடைந்த கடற்கொல்லைகளையுடைய, யாம் வாழும் ஊரில் நீ இரவில் தங்கினால் என்ன?” என்று பகற்குறி வந்துணர்ந்து செல்லும் தலைவனிடம் விரைந்து மணக்கச் சொன்னாள் தோழி.

183. கிடையாது போகுமோ நட்பு?

பேணுப பேணார் பெரியோர் என்பது நானுத் தக்கன்று, அது காணுங்காலை; உயிர் ஒரன்ன செயிர் தீர் நட்பின் நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப்பெரிது அழிதக்கன்றால் தான்ே கொண்கன், 'யான் யாய் அஞ்சுவல் எனினும், தான்் எற் பிரிதல் சூழான் மன்னே; இனியே கானல் ஆயம் அறியினும், ஆனாது, அலர் வந்தன்றுகொல்? என்னும், அதனால், புலர்வதுகொல், அவன் நட்பு எனா அஞ்சுவல் - தோழி! - என் நெஞ்சத்தான்ே!

- இளம்போதியார் நற் 72 "தோழி, “பெரியோர் பேண வேண்டியவற்றைப் பேணிப் போற்ற மாட்டார்” என்பது ஆராய்ந்து பார்க்கும் போது தெரிவதால் அது நாணத் தக்கதாத உள்ளது ஒர் உயிர் போல் இயைந்த குற்றந் தீர்ந்த நட்பினையுடைய உனக்கு யான் மறைப்பது எப்படி முடியும்? மிகப் பெரிதும் வருந்த வேண்டியதாய் உள்ளது. முன்பு, “யான் தாய்க்கு அஞ்சுவேன்” என்றாலும் தலைவன்தான்் நம்மைப் பிரிய நினையான். அது கழிந்தது இப்போது கடற்கரைச் சோலையில் விளையாடும் தோழியர் கூட்டம் அறிந்தாலும் தாங்க முடியாமல் “களவு வெளிப்பட்டு அலர் வந்து விடுமோ” என்கின்றான். அதனால் 'அவன் நட்புச் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் இல்லையாய் விடுமோ என்று என் உள்ளத் துள்ளே அஞ்சுவேன்.” என்று தோழி பாதுகாவலிலுள்ள தன் தலைவிக்கு உரைப்பவள் போலத் தலைவனுக்கு உணர்த்தினாள்