பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 165

சென்றார் காதலர் மலைப் பிளப்புக்களையுடைய குன்றத்தில் நெடிய முகில் மின்னிச் சிறிய துளிகளாகத் தொடங்கின; பெரிய மழையைப் பெய்தது ஆண் மானொடு போந்த பெண் மான் குமிழ மரத்தில் உராய்ந்தது கலன் அணிந்த பெண் ஒருத்தி பொன்னாற் செய்த காசுகளைப் பரப்பினாற் போலக் குமிழ மரம் ஒள்ளிய பழங்களை உதிர்த்தது அக் குமிழ மரங்கள் நிரம்பிய குறிய பல வழிகளையுடைய சுரத்தில் பொலிவு பெற்ற கூந்தலையுடையாய், எம்மொடு வருகிறாயா? எனக் கூறிய சொல்லையுடையவர் தலைவர் ஆதலால் அவர் செல்லும் வழி மழையையுடையது வெம்மையுடைய தன்று நீ வருந்தாதே’ என்று தலைவியை ஆற்றுவித்தாள் தோழி

269. தும்பியே நீ சென்று கூறுவாய்

கொடியை வாழி - தும்பி! - இந் நோய் படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென; மெய்யே கருமை அன்றியும், செவ்வன் அறிவும் கரிதோ அறனிலோய் - நினக்கே? மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய தாறு படு பீரம் ஊதி, வேறுபட நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்; சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.

- தும்பிசேர் கீரனார் நற். 227 “தும்பி, இப் பிரிவு நோய்த் துன்பம் குறைவதற்காக யான் உனக்கு உரைத்தேன் உன் உடம்பு கரியது. உன் அறியும் அறிவும் கரியது. ஆதலால் நீ அறமில்லாய் ஆயினாய். மனையைக் காக்கும் பொருட்டு இடப்பட்டது கிடக்கை யுடைய நுண்ணிய முள்வேலி அதன்மேலே படர்ந்திருக்கும் தாதொடு நெருங்கிய குலையோடு சேர்ந்த பீர்க்கம் பூ அப் பூவின் தேனை ஊதிவிட்டு, அதற்கு மாறுபட்ட பசலையை