பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H24 அருணகிரிநாதர் “கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த தடாள னேதென் தணிகைக் குமரநின் தண்டையந்தாள் சூடாத சென்னியும் நாடாத கிண்ணும் தொழாதகையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தன்னே" எனப்பாடி உருகினர். இங்ங்னம் பாடிப் பலநாள் திருத் தணிகையில் தங்கியிருந்து ஆண்டவனைப் பணிந்து போற் அறினர். சிதம்பரத்துக்கு (65 பாடல்கள்); அடுத்தபடியாக அதிக பாடலுள்ள தலம் திருத்தணிகை (64 பாடல்கள்); 127. ஆம் திருப்புகழ் தகைமைத் என்பதன் பாடபேதமான'பழனப் பொழில் சுற்றுறு பொற்றணிகைப் பதியிற் குமரப் பெருமாளே என்பதையும், 791-ஆம் திருப்புகழ் அருக்கி மெத்தென என்பதின் பாடபேதமான திருத்தணிப் பதிப் பெருமாளே என்பதையும் தணிகைப் பாடல்களாகக்கொண் டால் திருத்தணிகைப் பாடல்கள் 66 ஆகும். இனித் திருத் தணிகைப் பாடல்களால் விளங்குவன. இவையெனக் கூறு வோம்: தணிகைத் தலத்தைக் குறிப்பன: தணிகைமா நகர்-(1) கழுநீர், நீலோற்பலம், என்றும் மலர்கின்ற சுனையின் சிறப்பை உடையது. (252, 269, 272, 274, 278, 283, 284, 287, 291, 295, 309, 310, 1181). (2) பல திசையிலுள்ளாரும் நாடி நெருங்கி வரும் (சரவணப் பொய்கை) என்னும் திருக்குளத்தை உடையது 1258). (3) தமிழ்ப் பாஷை வழங்கும் ப்ரதேசத்துக்கு வட எல்லையாக விளங்குவது (255, 257, 3011. (4) முருக வேளின் திருப்புகழை ஒதுங் கருத்தினர் சேரும் பதி 1259). (5) உத்தம சிவனடியார்கள், முநிக் கணத்தவர் இமையவர், ஐந்து தலை நாகம் வழிபடும் தலம் (266. 303, 307). (6) மாதர்களும் வியக்கத் தக்க உண்மைப் பெருந் தவசினர் வாழும்பதி (277). (7) மறைமுழங்கு மாநகர் (291). (8) சிவலோகம் எனப் பாராட்டப்படும் திவ்ய கூேடித்திரம் (293). (9) எத்திக்கிலும் புகழப் படுவ தான பிரபல ஸ்தலம் (297, 306). (10) தூரத் தொழு வார் வினை சிந்திடும் மஹாகூேடித்திரம் (3111. (11) முருக