பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அருணகிரிநாதர் செய்யுள் 48. (சேயவன்): இப்பாடல் அவசியம்மனப் பாடஞ் செய்ய வேண்டிய அருமையது. நவக்கிரக தோஷத்தை நீக்க வல்லது. நல்ல புத்தியையும், யுக்தியை யும் கூட்ட வல்லது. தேவராத்தில் உள்ள வேயுறு தோளி' என்னுங் கோளறுபதிகம்’ போன்ற பெருமை யுடையது. ஆற்றல் வாய்ந்தது. நாளென் செயும் என்னும் கந்தரலங்காரச் செய்யுளுக்கு (38)த்துணை போயது. செய்யுள் 51. (சிகைத்தோகை); இப்பாடலில் (i) திரு. முருகாற்றுப் படையின் சிறப்பு மிக விசேடித்துப் பாராட்டப் பட்டுளது. தேவசேனையின் கலவி யின்பத்தினும் அதிக இன்பத்தை அந்நூல் முருகருக்குத் தந்ததாம். (ii) திருச் செந்துாரில் சமுத்திரத்தில் வதரைம்ப தீர்த்தம் என்னும் ஸ்நாந கட்டத்தில் (துறையில்) முழுகிப் பாண்டியன் மகள் அங்கசுந்தரிக்குக் குதிரை முகம் மாறி சுந்தர நன்முகம் கூடின சரித்திரம் இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இச்சசித் திரத்தை எங்கள் திருப்புகழ்ப் பதிப்பில் (மூன்ரும் பாகம்கந்தரந்தாதி (பக்கம் 39 பார்க்க). செய்யுள் 54. (திதத்த): இச்செய்யுளே வில்லிபுத்துணர ருடன் செய்த வாதில் அருணகிரியார்க்கு வெற்றி தந்தது. தகரவர்க்க எழுத்தொன்றிலேயே அமைந்த அருமை. ஒரெ ழுத்துச் செய்யுள் இது. செய்யுள் 56. (தென்னவ): இச்செய்யுளின் உரையில் ஒரு குறிப்பு கவனிக்கத்தக்கது. முன்பின் தென்னவன் அங்கம் நீற்ருல் திருத்தியது” என வருமிடத்து முன்பின் என்றதற்கு முன்=முற்காலத்தில், பின்=பின்னே கூனை யுடைய எனப்பொருள் உளது. இவ்வுரை அவ்வளவு சிறப்பினதல்ல. முன் என்பது காலத்தைக் குறிப்ப தல்ல, இடத்தையே குறிப்பது. முன்பின் என்றதற்கு முன்னிடத்தும் (மார்பிலும்), பின்னிடத்தும் (முதுகிலும்) எனப்பொருள் கொள்ள வேண்டும். பாண்டியனுக்கு மார்பின் முன்னும், முதுகின் பின்னும் இரண்டு கூன் கள் ங்கனவாம். H ண்டு கூனையும் சம்பந்தப் 露露*蠶 ప్లే திே: "இது '!