பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அருணகிரிநாதர் திருவண்ணுமலையிற் பெரிய கோபுரத்து வடவாயிலில்1 தவ நிலையில் அமர்ந்து, ஆறுமுகங்களையும் மொழிந்து மொழிந்து தியானித்தனர். அங்ங்ணம் பலநாள் தவங்கிடந்தும் மூவாசை களும் நீர்ப்பாசிபோல விலகுவதும் பின் கூடுவதுமாக இருந் தன. இதைக்கண்ட அருணகிரியார், 'என்னே 1 மாயையின் வன்மை ! மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே அகமாடை மடந்தைய ரென்றயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே -கந். அது. 5 -எனப் பிரமித்துப், படுவன பலவுங் குற்றம்............ கெடுவதிப் பிறவி சிசி (IV.76.10) என அப்பர்சுவாமிகள் கூறியவாறு தாமும் தமது பிறவியை 2வெறுத்து, மாயையில் வீழ்த்தினையே 1 முருகா! நான் ஏது பிழை செய்தேன் என ஏங்கிக் கவலுற்றுத் தமது உயிரை விடுவதே உத்தமம் எனத் துணிந்தனர்3. அருணைத் திருக் கோயிலின் கோபுரத்தி லேறித் தமது உயிரை மாய்க்கக் குதித்தனர். 1.1. அடலருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகிற் சென்று கண்டுகொண்டேன் * களிற் றுக்கு இளைய களிற்றினையே’ -கந். அலங். காப்பு 2. ஆடக் விசித்ர கண் கோபுர முகப்பில் அருணுபுரியில் ற்கும் அடையாளக் காரனும்’-வேளைக்காரன் வகுப்பு 3. அருணை யிறையவர் பெரிய கோபுரத்தில் வடபாலு மர்ந்த அறுமுக்ப் பெருமாளே.' -திருப் 540 4. அருணகிரிநாதர் அருணைச் சிகரி வடவாசலிற் பயில’’ -விரிஞ்சை. பிள்ளைத் தமிழ் 2. பாழ்வாழ் வெனுமிப் படுமாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே, தாழ்வானவை செய்தன தா முளவோ? -கந். அது. 31 3. 1. சடத்தில் நின்றுயிரான துறத்தற்கு -திருப். 394 2. அக்மதை எடுத்தசேமம்_ இதுவோ_ என் றடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும் = -திருப். 392 3. வரவர மனந் திகைத்த பாவி -திருப். 181 4. உருள்வெற்ப்ேறும் அருணகிரி-மாம்பழக் கவிச் சிங்கம் -பழபுைரிமாலை