பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அருணகிரிநாதர் 50 40 45 50 தில்லையில் நடன திவ்விய தரிசனம் ஒல்லையிற் கண்டங் குவந்தனை போற்றி ஏரகப் பதியில் எந்தை பாத தரிசனம் பெற்ற தவத்தோய் போற்றி مركته திருவை யாறுடன் ஏழு திருப்பதி விழாவைக் கண்ட மேலவ போற்றி தண்ணியல் வயலூர்த் தலத்தினில் அத்தன் வித்தக மருப்புடை வேழமுகத்தன் மயில்வேல் கடம்பு மானடி குக்குடம் பன்னிரு தோனவை பயிலும் சந்தம் பாடெனச் செப்பும் பாக்கியம் பெற்ற உத்தம பத்தியில் உயர்ந்தோய் போற்றி திருப்புகழ் நித்தம் செப்பும் பேற்றை அத்தலத் தேபெற் றமர்ந்தனை போற்றி ‘விகட பரிமள எனவரும் வீருர் அரிய பெரிய திருப்புகழ் அதனைச் செப்பிய ஞான்று திருவார் முருகன் கனிவுடன் ஏக முகத்துடன் கனவிடைத் தோன்றி அன்ப! சுதினம் இன்றே விராலி மலைக்கு வா’ என விளக்கி அவாவுடன் அழைக்க அணைந்தனை போற்றி கருச்சந் திப்பைக் கழிக்க வல்ல திருச்செங் கோட்டிற் சேயைக் கண்டு நாலா யிரங்கண் நான்முகன் படைத்திலன் அந்தோ என்றங் கழுங்கினை போற்றி நாகா சலதது நாத எனககு நால்வகைக் கவிகள் நயந்தளித் தென்றும் சாகா வரமதைத் தந்தனை என்றே அநுபூதிக் கவி அருளினை போற்றி எங்கே நினைப்பினும் அங்கே எனது செங்கோட்டு வேலன் தேர்ந்தளிப் பானெனச் செப்பி மகிழ்ந்த சீமான் போற்றி செடிக்கா பலசூழ் சென்னி மலையிற்