பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 79 உபதேசங்களை அருணகிரியார் உலகுக்கு எடுத்து ஒதியுள் 11l Il II , == பட்டாலியினின்றும் நீங்கிப் பின்னர்ச் (119) சிங்கை (911, 942, 99*)க்கு வந்து தரிசித்து, (120) ஊதி மலையை (393, 394) அடைந்தார். அத்தலத்துப் பதிகத்தில் தாம் முதல் நாளில் தற்கொலை புரியத் துணிந்த தருணத்தில் இரக்கங்காட்டி இறைவன் தம்மை ஆட்கொண்டதை சுப மளித்த கருணையைச் சடத்தில் நின்றுயிரான துறத்தற் கிரக்கமுஞ் சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே(394) -எனப் பாராட்டி மகிழ்ந்தார். அதன் பின்பு (121) கீரனூருக்கு (956) வந்து தரிசித்துத் திருமால் வாலி 1 யுடன் கீரவாரிதியை (திருப்பாற்கடலை)க் கடைந்த சரி தத்தை விளக்கிப், பின்பு (122) ஆய்க்குடியைத் (982) தரி சித்து அத்தலத்து முருகரைச் 'சாம பரமேட்டியைக் காவ விடும் ஆய்க்குடிக் காவலவ’-என வணங்கிப், (123) பழநித் தலத்துக்குத் (திருவாவினன் குடிக்கு) (100-194, 1308-) வழி நடந்தார். 12. பழகி முதல் மதுரை வரை 14 தலங்கள்: 123-126) உள்ளத்தையும் உயிரையும் ஒருங்கே கவரும் தோற்றங் கொண்ட பழநிமலை கண்ணிற் பட்டபொழுதே புளகாங்கிதம் கொண்டு பரவசமுற்று இந்நாள் காறும் பழநி, பழநி, பழநி என்று தல நாமத்தைக் கூடப் படித்துச் ஜெபிக்காது போனேனே, அங்ங்ணம் ஜெபிப்பவரைக் கூடத் தலை வணங் கினேன் இல்லையே என வருந்தி படிக்கின்றிலை! பழநித் திருநாமம் 1 படிப்பவர்தாள் முடிக்கின்றிலை! முருகள் என்கிலை! முசியாமலிட்டு மிடிக்கின்றிலை! பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை! நெஞ்சமே! தஞ்சமேது நமக்கினியே - (கந். அலங். 75) எனப் பாடிக் கொண்டே பழநி ஊரை அடைந்தார். FK: பாட பேதம் பார்க்க. 1. 918-ஆம் பாடலையும் பார்க்க. - திருப்புகழ் முதற்பாகம்-அநுபந்தம் பார்க்க.