பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பேசுவோர்களும், இப்படி த்தான் அறிவிலிகளாகத் திகழ்ந்து கொள்கிறார்கள்.

அவர்கள் தெரிந்துதான் விளையாட்டுக்களைப் பற்றி அப்படிப் பேசுகின்றார்களா என்றால், அப்படியும் இல்லை. அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே புலம்பித்திரியும் புண்ணியவான்கள். என்னவென்று தெரியாமலேயே ஏளனம் பேசி, ஏளனத்துக்கு ஆளாகும் இளிச்சவாயர்கள். அவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

விளையாட்டுக்களை மனம் விரும்பி விளையாடுவோர்களைப் பற்றி விதண்டாவாதப் பேசுபவர்கள்; விளையாட்டுக்களில் பயிற்சி பெற்றவர்களைப் பற்றி வெறுப்புடன் தரம் தாழ்த்திப் பேசுபவர்கள், விளையாட்டுக்களில் ஈடுபடுவோரை பற்றி வெவ்வேறு விதமாகப் பேசுபவர்கள் எல்லோருமே ஒரே விதமான தவறைத் தான் செய்து கொண்டு வருகின்றார்கள். அதற்கு என்ன காரணம்?

அவர்கள் விளையாட்டுக்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாததுதான் தலையாய காரணமாகும்.

பலவிதமாகப் பலரும் விளையாட்டுக்களைப் பற்றி பேசுவதைக் கேட்க நேர்ந்த எனக்கும், முதலில் குழப்பமாகத்தான் இருந்தது. மற்றவர்கள் பேசுவதுபோல், ஒன்றுக்கும் உதவாதவைகளா இந்த விளையாட்டுக்கள்? அர்த்தம் எதுவும் இல்லாதவைகளா இந்த விளையாட்டுக்கள் என்று நானும் எண்ணத் தொடங்கினேன்.

ஓராண்டு காலம் விளையாட்டுத் துறையில் பயிற்சிபெற்று, உடலை பாடாய்ப்படுத்தி, உயிரைக் கசக்கிப் படித்து. சென்னை பல்கலைக்கழகத் தேர்வில் முதன்மை நிலை பெற்று முடித்து, ஒர் உயர்ந்த கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியேற்று, இரண்டாயிரம் மாணவர்களுக்கு பாடம் சொல்-