பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
129

caisson disease : (நோயி.) காற்றழுத்த நோய் : மிகுந்த அழுத்த முடைய காற்றினூடாக உழைப்ப வர்களுக்கு வரும் நோய். மிகுந்த காற்றழுத்தத்தில் இரத்தத்தில் நைட்ரஜன் கரைந்து விடுகிறது. காற்றழுத்தம் குறையும்போது, நைட்ரஜன் குமிழ்களாக வெளி வரும். அப்போது மிகுந்த வலி உண்டாகும்; சிலசமயம் மரணமும் விளையும்

caking coal : பசை நிலக்கரி : சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை

calamine : (வேதி.) துத்தநாகக் கரிகை : Zn(OH)2 ZnSiO8 துத்த நாகம் கலந்த சுரங்கக் கணிப் பொருள் வகை. துத்தநாகம் கிடைக்கும் ஒரு கனிமம்

calcimine : நீற்று சுன்னகம் : நீற்றுச் சுண்ணக நீறாக்கிச் சுவர்களில் வள்ளையடிப்பதற்குப் பயன்படும் சுண்ணகம்

calcine : (வேதி.) புடமிடுதல் : நெருப்பில் சுட்டுப் புடமிட்டு மாறாச் சுண்ணமாக்குதல்

calcined bone : பபுடமிட்ட எலும்பு : உலர் வெப்பமூட்டுதல் மூலமாகத் தயாரிக்கப்பட்ட, எளிதில் தகர்ந்து விடக்கூடிய தூளாக மாற்றப்பட்ட எலும்பு

calcined kaolin : புடமிட்ட பீங்கான் : இது பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண் வகை. இது அலுமினியம் சிலிக்கேட் எனப்படும். புடமிட்ட பீங்கான் செய்யப் பயன்படுகிறது

calcining : புடமிடுதல் : உலோகக் கனிமங்களைப் புடமிட்டு அதிலிருந்து தீங்கான அன்னியப் பொருள்களை நீக்குவதற்குச் சூடாக்குதல்

calcite : சுண்ணகக் கரியகை : தேனிரும்பு, எஃகு ஆகியவற்றைத் தயாரிப்பதில் உருக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக்கல். அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிச்சிகன், மேற்கு வர்ஜினியா, இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் மிகுதியாகக் கிடைக்கிறது

calcium : (வேதி.) கால்சியம் (Ca) : சுண்ணகம்-கண்ணக்கல் - களிக்கல் ஆகியவற்றிலுள்ள ஒரு மூல உலோகம். வெள்ளி போன்ற வெண்மை நிறமுடையது. மென்மையான உலோகம். புதிதாக எடுக்கும் போது ஒளிர்வுடையதாக இருக்கும். காற்றுப் பட்டதும் ஆக்சிகரணத்தின் மூலம் விரைவாக மங்கி உலோகக் கலவைகள் தயாரிப்பதிலும், பள்ளி ஆய்வுக் கூடங்களில் நீரிலிருந்து ஜன் வாயு தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

calcium chloride : (க.க.) கால்சியம் குளோரைடு : ஈரத்தை உறிஞ்சுவதற்குப் பயன்படும் ஒரு வேதியியல் பொருள்

calcium corbide : (வேதி.) கால்சியம் கார்பைடு : (CaC2) சுண்ணாம்புக்கல்லும் சுட்ட கரியும் கலந்த ஒரு கலவையை மின் ஊதுலையில் சூடாக்கி இது பெறப்படுகிறது. நீருடன் கலந்து, அசிட்டி லின் வாயு தயாரிக்கப் பயன்படுகிறது

calcium corbonate : கால்சியம் கார்போனேட் : சுண்ணாம்புக்கல் வகை. சுண்ணாம்புக் கல்லாக மிகுதியாகக் கிடைக்கிறது. பளிங்கு ஒரு தூய்மையான சுண்ணாம்புக்கல், சுண்ண ஓடுகள், பவளம் போன்றவை முக்கியமாக கால்சியம் கார்பனேட்டுகளாம்

calcium oxide : கால்சியம் ஆக்சைடு : சுண்ணாம்பு தூய்மையான கால்சியம் ஆக்சைடு ஆகும்

calculagraph : கணிப்பு வரை வான் : கடிகாரமும், நேர முத்திரை