பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
147

Center line : (வரை.) மையக் கோடு : ஒரு பொருளின் மையத்தைக் குறிக்கின்ற புள்ளிகளும், சிறு சிறு கோடுகளும் கொண்ட ஒரு கோடு

center of altraction : கவர்ச்சி மையம்

Center of buoyancy : (வானூ.) ஈர்ப்பு மையம் : மிதக்கும் பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீர்மத்தின் ஈர்ப்பு மையம்

center of gravity : புவியீர்ப்பு மையம் : ஒரு பொருளை ஒத்த ஒரு நிலையிலும் சம நிலையிலும் வைக்கக் கூடிய புள்ளி

center of inertia / centre of mass : பொருண்மை மையம்

center of percussion : தாங்குதள மையம்

center of pressure : (வானூ.) அழுத்த மையக் குணகம் : விமானச்சிறகின் முன் விளிம்பிலிருந்து அழுத்த மையத்தின் தொலைவுக்கும் நாண் நீளத்திற்குமிடையிலான விகிதம்

center of pressure of an air foil section : (வானு.) விமானக் காற்றழுத்தத் தளத்தின் அழுத்த மையம் : விமானத்தின் காற்றழுத்தத் தளப்பகுதியின் நாணில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதி தேவையானால் நீட்டப்பட்டிருக்கும். இந்தப் புள்ளி, நானும், காற்றுச் சக்தி பின்கூட்டு விளைவாக்கத்தின் செயலியக்கக்கோடும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும்

center piece : (க.க) மைய அணியொப்பனை : மாடியின் மைய அணி ஒப்பனை உறுப்ப

center punch : (உலோ. வே) மையத் தமருசி : இது ஒர் எஃகுத் தமருசி. இது தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிட உதவுகிறது

மையத் தமருசி

center reamer : (பட்.) உலோக மையத் தமருசி : சுழல் தண்டுகள் போன்ற உலோகப் பொருள்களின் மையத்தில் துளையிடுவதற்குப் பயன்படும் உலோகத் தமரூசி அல்லது திருகாணி. இது சாதாரணமாக 60° சாய்வாக இருக்கும். துரப்பண வேலைகளுக்கு இது பெருமளவில் பயன்படுகிறது

தமருசி

center rest : (எந்.) மைய ஆதாரம் : கடைசல் வேலைப்பாடுகளுக்கான ஒர் ஆதாரம். நீண்ட சுழல் தண்டுகள், கதிர்களுக்குத் துளையிடுதல் போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகிறது

centers : (எந்.) ஊடச்சுகள் : கடைசல் எந்திரங்களிலுள்ள கூம்பு வடிவ முனைகளையுடைய அச்சுகள். இதில் கடைசல் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களை தாங்கி நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்

center section : (வானூ.) மையப்பகுதி : தொடர்ச்சியான இறகினைக் கொண்டிருக்கும் விமானத்தில், சிறகின் மைய ஆயம்; மைய ஆயம் இல்லையெனில் ஏதேனும் இறகு மையப் பகுதியின் வரம்புகிள், இணைப்புப் புள்ளிகள், உடற் பகுதியிலிருது உள்ள தூரத்தைப் பொறுத்து நிருணயிக்கப்படுகிறது

centering control : குவிமையக் கட்டுப்பாடு : தொலைக்காட்சியில் செங்குத்தாக அல்லது கிடைமட்டத்தில் படத்தை குவிமையத்தில் வைக்கும் கட்டுப்பாடு

center square : (உலோ, வே.) மைய அளவி : ஒரு வட்டத்தின்