பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

மையத்தை அல்லது ஒரு வட்டத்தின் வில்லின் மையத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படும் ஒரு கருவி. கடைசல் செய்யப்பட வேண்டிய ஒரு சுழல் தண்டின் அல்லது நீள் உருளையின் முனையின் மையப் புள்ளியைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது

centre of suspension : தொங்கல் மையம்

center table : (மர, வே.) மைய மேசை : ஓர் அறையின் மையத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் எல்லாப் பக்கங்களிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு மேசை

centigrade scale : சென்டிகிரேட் அளவை : நீர் உறைநிலை ௦ பாகையாகவும், கொதிநிலை 100 பாகையாகவும் வகுக்கப்பட்டுள்ள வெப்ப மானி. அமெரிக்காவில் முக்கியமாக அறிவியல் பணிகளுக்காகப் பயன்படுகிறது

centimeter : சென்டிகிரேட் : மெட்ரிக் முறையில் குறைந்த நீள அலகுஃபிரெஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நூற்றில் ஒரு கூறு. 0.3937 அங்குல நீளம்

central station : (மின்.) மைய மின் நிலையம் : மின்னொளி வழங்கப்படும் ஒரு மின்னாக்க நிலையம். இங்கிருந்து நுகர்வோருக்கு மின்னொளியும், மின்விசையும் வழங்கப்படுகிறது

centrifugal : (பட்.) மையம் விட்டோடும் விசை : மையமொன்றைச் சுற்றிச் சுழலும் பொருள்களில் மையத்துக்கு எதிர்திசையில் செயற்படும் விசையாற்றல்

centrifugal flow engine : (வானூ.) விரி மையப் பாய்வு எஞ்சின் : மையம் விட்டோடும் அழுத்துப் பொறியையுடைய , சாற்று விசை உருளி எஞ்சின்

centrifugal spark advance : விரிமையச் சுடர்ப்பொறி வளர்ச்சி : உந்துவண்டியில் எஞ்சின் வேகம் மாறுபடுகிறபோது சுடர்ப்பொறி ஏற்றம் பெறுகிற அல்லது குறைகிற அமைவுடைய காலக் கணிப்பான், பகிர்ப்பான், வேகங்காக்கும் விசையமைவு

centrifugal switch : (மின்.) மையம் விலகு இணைப்பு விசை : ஒற்றை நிலைப்பிளவு நிலை மின்னோடியில் பயன்படுத்தப்படும் ஒருவகை இணைப்பு விசை. மின்னோடி இணக்க வேகத்தை எட்டிய பிறகு தொடக்கச் சுருணையை இயக்கி வைக்க இது பயன்படுகிறது

centrifugal type super charger : மையம் விலகு வகை மீவிசைக் காற்றடைப்பான் : விமானத்திலுள்ள மீவிசைக் காற்றடைப்புக் குழாய். இதிலுள்ள ஒன்று அதற்கு மேற் பட்ட அலகுள்ள தூண்டு தட்டங்கள், மையம் விட்டோடும் செயல் மூலமாக, ஒரு தூண்டு கருவியில் காற்றினை அல்லது கலவையை அழுத்திச் செறிவாக்குகிறது

century (அச்சு.) நூற்று முகப்பு அச்செழுத்து : புத்தக வேலையில் பயன்படுத்தப்படும் அச்செழுத்தின் முகப்பு

ceramics : மட்பாண்டத் தொழில் வேட்கோவர் கலை : சுட்ட களி மண்ணிலிருந்து பாண்டங்கள் செய்யும் கலை. அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களையும் இது குறிக்கிறது

cerasin : (வேதி.) மரப்பிசின் : மர வகைப் பிசினின் கரையாமலிருக்கும் ஒரு பொருள். இது மஞ்சள் அல்லது வெண்ணிறத்தில் மெழுகு போல் இருக்கும். மெழுகுத் திரி மின்காப்பு ஆகியவைகளில் பயன்படும் புதைபடிவ அரக்குப்