பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188

வெப்பத்தையும் தாங்குவதில் தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த 'பாபிட்' உலோகக் கலவையைவிட மிகச் சிறந்தது

copper pipe : (கம்.) செப்புக் குழாய் : இதன் உட்புற அல்லது வெளிப்புற விட்டங்களைக் கொண்டு இதன் வடிவளவு தீர்மானிக்கப்படுகிறது. இதன் கவரின் கனம், பிதுக்கக் கம்பி அளவி மூலம் அளவிடப்படுகிறது. ஈயக் கம்மிய வேலைகளிலும் இது பயன்படுகிறது

copper plate : (அச்சு.) செப்புத் தகடு : பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத் தகடு. இந்தத் தகடு செப்பம் செய்யப்பட்டு இதில் எழுத்துக்கள் செதுக்கப்படுகின்றன

copper plating : செப்பு முலாமிடுதல் : மற்றொரு உலோகத்தில் செப்பு முலாமிடுவதற்கான முறை. இதில் பொட்டாயசிம் சையனைடு முக்கியமாகப் பயன்படுகிறது. அமிழ்த்துதல், மின் முலாமிடுதல் ஆகிய இருமுறைகளிலும் இந்த முலாமிடுதல் செய்யப்படுகிறது (பார்க்க : மின்முலாமிடுதல்)

copper steel : செப்பு எஃகு : குறைந்த அளவு கார்பன் கொண்டுள்ள ஒருவகை எஃகு. இதில் 0. 25% செம்பு கலந்திருக்கும். அரிமானத்தைத் தடுக்கும் காப்பு தேவைப்படும் கட்டுமானப் பணிகளில் இதில் பயன்படுத்தப்படுகிறது

copper sulphate : (வேதி.) மயில்துத்தம்; காப்பர் சல்பேட் : பார்க்க; மயில் துத்தம்

copraloy : (உலோ.) செப்பு உலோகக் கலவை : பார்க்க; செப்பு எஃகு.

copy : சார் படிவம், எழுத்துப் படிவம் : வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த அறைகலன்களின் ஒத்த வடிவங்களை உருவாக்குதல்.அச்சுக் கலையில் அச்சுக்கான எழுத்துப்படி

copy holder : (அச்சு.) படி வாசிப்பவர் : அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர்

coquina : (வேதி.) கோக்கின : கடலிலுள்ள ஒடுகள் ஒட்டிக் கொள்ளும் தன்மையினால் உண்டாகும் ஒருவகைப் பாறை. இது கால்சியம் கார்போனேட் மூலம் உண்டாகிறது

coral : (வேதி.) பவழம் : கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை. இது கால்சியம் கார்போனேட் மூலம் உண்டாகிறது

carbel : (க.க.) தண்டையக் கட்டு : பொருள்களை வைப்பதற்காக அல்லது பளு தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட கல் அல்லது கட்டை

cord : (மர.வே.) வெட்டு மர அளவை : 1.21 மீ.நீளம், 1.21 மீ. உயரம், 2.42. மீ. நீளம் (3.63 க.மீ.) உடைய வெட்டு மர அளவை

cordierite : (மின்.) கார்டியரைட்: மக்னீசியம், அலுமினியம் சிலிக்கேட்டுகளினாலான மின்காப்புப் பொருள்

core : மைய உட்புரி : வார்ப்படத்தின் உருச்செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல்

பிளாஸ்டிக்கில் வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட பகுதி

core box : (வார்.) மைய உட்புரிப் பெட்டி இது பொதுவாக மரத்தினாலானது. இதில் மைய உட்புரி இறுக்கிப் பொருத்தப்பட்டிருக்கும்

core-box plane : மைய உட்புரிப் பெட்டி / இழைப்புளி : மைய உட்