பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
201

cuprite - செம்புக் கனிமம்: (Cu2O) சிவந்த செம்பு உலோகக் கனிமம். இது அரிசோனாவிலும், பல தென் அமெரிக்க நாடுகளிலும் கிடைக்கிறது

cupro-nickel: செம்பு நிக்கல்: செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை. இது எளிதில் கம்பியாக நீட்டக் கூடியது. தகடாக்கக் கூடியது. இதில் 10%க்கு மேல் நிக்கல் கலந்திருந்தால் அரிமானத்தைத் தடுக்கும்

cup shake : (தச்சு.) வெட்டுமரப் பிளவு: வெட்டுமரத்தில் இரு வளையங்களிடையே காணப்படும் பிளவு

cup wheel : கிண்ணச் சக்கரம் : விளிம்பினால் வெட்டுமாறு ஒரு கிண்ண வடிவில் வடிவமைக்கப்பட்ட ஓர் அரைவைச் சக்கரம்

curb box : ( கம்.) விளிம்புக் குழாய்ப் பெட்டி : ஒரு விளிம்புக் குழாய் மீது வைக்கப்பட்டுள்ள குழாய் வடிவிலான அல்லது குழல் போன்ற நீண்ட பெட்டி வடிவிலான ஒரு சாதனம், இதனுள் ஒரு சாவியை நுழைத்து விளிம்புக் குழாயைத் திருப்பலாம்

curb cock : விளிம்புக் குழாய்: ஒரு குழாயின் விளிம்பின் அருகில் பொருத்தப்பட்டுள்ள ஓர் ஒரதர்

curb roof (க.க.) சரிவு மோடு: இரு பக்கச் சரிவுகளிலும் மேற்பகுதிச் சாய்வைவிடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு

பார்க்க: இரு சரிவு மோடு.

curdling : கெட்டியாக்கம் : அரக்குச் சாய இனாமல் பொருளில் விரைவில் உலர்ந்துவிடக் கூடிய மிகக் குறைந்த தரமுடைய, வலுக்குறைந்த கரைமத்தைச் சேர்த்தல்

cure : (குழை) பதனமுறை : பிசினுடன் ஒரு கிரியா ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம், அல்லது வெப்பத்தையும் அழுத்தத்தையும் அதிகரிப்பதன் மூலம் சில சமயம் அழுத்தம் இல்லாமல், வேதியியல் வினைகளை உண்டாக்கி, அந்தப் பிசினின் இயற்பியல் வடிவத்தையும் வேதியியல் குணங்களையும் மாற்றுதல். மாறுதல்களின் சுழற்சியின் இறுதியில் விளிம்பில் உண்டாகும் பொருள்

cure time:(குழை,) பதனக் காலம்: பிளாஸ்டிக் உற்பத்தியில் வார்ப்படப் பொருளை மூடுவதற்கும், அழுத்தத்தை விடுவிப்பதற்குமிடையிலான இடைவெளிக் காலம். பிளாஸ்டிக்குகளை மென்தகடுகளாக்கும் போது, கிரியா ஊக்கியைச் சேர்ப்பதற்கும், கெட்டிப்படுவதற்கு மிடையிலான இடைவெளிக்காலம்

curie point : (மின்) காந்த மறைவு நிலை : ஓர் அயக்காந்தப் பொருளில் எஞ்சியிருக்கும் காந்தத் தன்மை மறைந்துபோகிற வெப்ப நிலை.

curing : (குழை) பதனஞ் செய்தல் : ஒரு கெட்டிப்படுத்தும் பொருளை வேதியியல் வினை மூலமாக கரையக்கூடிய அல்லது உருகக் கூடிய நிலையிலிருந்து கணிசமான அளவுக்குக் கரையாத அல்லது உருகாத வடிவத்திற்கு மாற்றுதல். இந்த வினை ரப்பரைக் கந்தகம் கலந்து வலிவூட்டுவதற்கு ஒப்பானது

curl : சுருள்வு : வெட்டுமரத்தின் கரண் பரப்பில் காணப்படும் உள் வரி

curled hair: சுருள் முடி: குதிரை வால்மயிர், பிடரிமயிர், கால்நடைகளின் வால்மயிர், பன்றி வால் மயிர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சுருண்ட முடி. இதனைப் பல செய்முறைகள் மூலம்