பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
231

போன்று இரு தொடர்புகளை அல்லது இணைப்புகளைக் கொண்டிருததல

double roll: (அச்சு.) இரட்டை அச்சுருளை: ஒவ்வொரு அச்சுப்பதி வினையும் இருமுறை மையொற்றி அழுத்தும் உருளை

double riveting: இரட்டைக் குடையாணி: தண்டவாளம் - கம்பம் முதலியவற்றில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறையில் இரு வரிகள் அல்லது முனைகளைப் பொருத்தும் முறையில் நான்கு வரிகள் இரட்டைக் குடையாணி இணைப்பானது, இரு இணையான குடையாணி வரிசைகள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது


double row radial engine : (வானூ.) இரட்டை ஆரை எஞ்சின்: ஒரு பொதுவான திருகு சுழல் தண்டினைச் சுற்றி ஆரைகளைப்போல் அமைக்கப்பட்டுள்ள இருவரிசை நீள் உருளைகளைக் கொண்ட ஒர் எஞ்சின் முன்னும் பின்னுமாக உள்ள நேரிணை நீர் உருளைகள் வரியிணைக் கொண்டிருக்கவோ, கொண்டிராமலோ இருக்கலாம்

double seaming machine : இரட்டை வெட்டுவாய் இணைப்பு எந்திரம் : கப்பலின் உடலில் வெட்டு வாய் இணைக்கப்பட்ட பின்பு எஞ்சியிருக்கும் விளிம்புகளைச் சமனப்படுத்துவதற்கான எந்திரம்

double threaded screw : (எந். .) ஈரிழைத் திருகு : இரு தனித்தனி திருகு சுழல்களுடைய ஒரு திருகு, இந்தத் திருகு சுழல்கள் உடற்பகுதியைச் சுற்றி ஒன்றுக்கொன்று இணையாகச் சுழன்றிருக்கும். இது செலுத்து வேகத்தை அதிகரிக்க உதவுகிறது

double throw switch : (மின்.) இருவழி விசை : இருவேறு திசைகளில் திருப்பக்கூடிய ஒரு மின் விசை. இது ஒரு மின்சுற்றினை இருவேறு மின்சுற்றுகளுடன் வெவ்வேறு சமயத்தில் இணைக்கிறது

douse : திரவத் தோய்வு : உலோகத்தைக் கெட்டியாக்கும் போது சூடாக்கிய உலோகத் துண்டினைக் குளிர்விப்பது போன்று ஒரு திரவத்தில் நன்கு தோய்த்தல்

douzieme : டுசியெம் : கடிகாரம் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் ஒர் அளவீட்டு அலகு. இதன் அளவு. .0188செ.மீ

dovetail : (மர.வே.) பொருத்திணைப்பு : ஒன்றை ஒன்றுடன் பொருத்தி இறுக்கிப் பிணைக்கும் இணைப்பு. இதில் புறாவின் வால் போன்று வடிவுடைய ஒரு பொருத்து முளை அதேபோன்று வடிவுடைய துளைப் பொருத்துச் சட்டத்துடன் பொருந்தி இணைகிறது

dovetail cutter: (மர.வே.) பொருத்திணைப்பு வெட்டு கருவி: பொருத்திணைப்பின் உள்முகங்களையும், வெளிமுகங்களையும் வெட்டுவதற்குப்பயன்படும் கருவி. இதன் உதவியால் விளிம்புகளை வசதியாகச் சமனப்படுத்தலாம்

dovetail dado: (மர.வே.) பொருத்திணைப்புச் சால்வரி : திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத்