பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
235

dress : (எந்.) செப்பனிடல் : ஒரு கருவியைச் சாணை பிடித்து அதன் மூல வடிவத்திற்குச் செப்பனிடுதல்

dresser: (கம்.) செப்பனிடு கருவி: உலோகக் குழாய்களையும் தகடுகளையும் சீர்மை செய்வதற்கு அல்லது நேராக்குவதற்குப் பயன்படும் எந்திரம்

dressing: மெருகுப் பொருள்: துணிகளுக்கு மெருகேற்றுவதற்குப் பயன்படும் பொருள்

drier : (வண்.) உலர்த்து பொருள்கள் : வண்ணங்களை உலர்த்துவதற்குப் பயன்படும் பல்வேறு பொருள்களான ஈயம், மாங்கனீஸ் ஆகியவற்றின் உப்புகளும், ஆக்சைடுகளும் இவற்றுள் சில

drift : (வானூ.) காற்று விசையியக்க அழுத்தம் : விமானத்தின் வெளிப்புறங்களில் செயற்படும் விசையியக்க அழுத்தம்

drift angle: (வானூ.) திசைமாறு கோணம் : ஒரு விமானத்தின் நீள் வாக்கு அச்சுக்கும், தரைக்கு மேல் அதன் பாதைக்குமிடையிலான கிடைமட்டக் கோண்ம்

drift bar: (வானூ.) திசைமாற்றக் கோல் : விமானத்தின் அச்சுக்கும் அதன் இயக்கத் திசைக்குமிடையிலான மாற்றத்தைக் காட்டும் திசை மாற்ற மானியின் ஒரு பகுதி. இதில் இந்த இயக்கத் திசையையொட்டி அமைத்திடத்தக்க ஒரு கம்பி அல்லது புயம் அமைந்திருக்கும்

drift meter : (வானூ.) திசைமாற்று மானி : ஒரு விமானத்தின் நீள்வாக்கு அச்சுக்கும் தரைக்கு மேல் அதன் பாதைக்குமிடையிலான கிடைமட்டக் கோணம்

drift pin - (எந்.) குடையாணி முனை : குடையாணித் துவாரங்கள் ஒழுங்கு வரிசையில் இல்லாத போது அவற்றில் செலுத்தப்படும் ஒரு வட்டவடிவக் கூம்பு முனை. பல சமயங்களில் குடையாணியைப் பொருத்துவதற்கு அனுமதிக்கும் அளவுக்கு இந்தத் துவாரங்கள் திருத்தியமைக்கப்படும்

drift plug : (கம்..) நீட்சிஆப்பு ; இடைமுறுக்கினை நீக்குவதற்காக ஓர் ஈயக் குழாயினுள் செலுத்தப்படும் ஒரு மரஆப்பு

drift punch : (எந்.) இணைப்பாணி : குடையாணி அல்லது மரையாணித் துவாரங்களை அண்டைப்பகுதிகளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி

drill : (எந்.) துரப்பணம்: கல்லிலோ, உலோகத்திலோ, பற்களிலோ பிற திண்ணிய பொருள்களிலோ துளையிடுவதற்கான ஒரு கருவி

drill bushings: (எந்.) துரப்பணச் செருகிகள் : துவாரங்களைச் சரியான இடத்தில் நிலைப்படுத்த உதவும் இடுக்கிகள், பொருத்திகள் ஆகியவற்றின் நுழைவாயில் பொருத்துவதற்கான கடினமான எஃகுச் செருகிகள்

drill chuck : (எந்.) துரப்பண ஏந்தமைவு : துரப்புணங்களை ஏந்தி வாகாகப் பிடித்துக் கொள்ளவல்ல அமைவு

drilled hole: துரப்பணத் துவாரம்: துரப்பணத்தால் துளையிடப் பட்ட துவாரம்