பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
239

dry ice : (குளிர். பத.) உலர் பனிக்கட்டி : குளிர்பதன முறையிலும், பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் திட கார்பன்டையாக்சைடு

dry indicator : (ஒளி..) உலர் வளவி : ஈரப்பதனைக் கண்டறிந்து காட்டும் ஒரு தூள். இதில் குருணை விடிவச் சர்க்கரையின் 10 பகுதிகள், மெத்தில் கலவையின் 1/10 பகுதியுடன் கலக்கப்பட்டிருக்கும்

dry kiln :(மர..)உலர் உலை: மரத்தை விரைவாகப் பதப்படுத்தப் பயன்படும் ஒரு சூளை

dry measure : முகத்தலளவை : கூலம் முதலிய பண்டங்களை அளப்பதற்கான முகத்தலளவை முறை

2 பிண்ட் = 1 குவார்ட்
8 குவார்ட் = 1 பெக்
4 பெக் = 1 புஷல்
105 குவார்ட் = 1 பேரல்

dry rot . உளுப்பு : காளான் வகைகளினால் வெட்டு மரத்திற்குப் புறந்தோன்றாமல் உள்ளீடாகச் சிதைவு ஏற்படுத்தும் நோய் வகை

dry rubble : உலர் கட்டுமானக்கல் : சுவரில் காரையின்றி கொத்தாத கட்டுமானக்கற்களை அடுக்கி வைத்தல்

dry run வெற்று ஒத்திகை : ஒளிப் படக் கருவிகள் அல்லது பிற சாதனங்கள் இன்றி நடைபெறும் ஒத்திகை

dry sand : (வார்..) உலர் மணல் : மணற் கலவைகள், இது உலர்ந்தவுடன் உருகிய உலோகத்தினால் ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்கும் ஆற்றலுடையது.

dry sand core : (வார்..) உலர் மணல் வார்ப்படம் : அடுப்பில் முழுவதுமாக வதக்கிய அல்லது உலர்த்திய வார்ப்பட உருச்செறிவு

dry spot : (குழை.) உலர் பரப்பு : தகடாக்கிய பிளாஸ்டிக்குகள், கண்ணாடி ஆகியவற்றில், உள் (படுகையும் கண்ணாடியும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதிருக்கிற பரப்பிடம்

dry steam . உலர் நீராவி : ஈரப்பதம் இல்லாமல் பூரிதமாகிய நீராவி

dry weight: (விண்) :உலர் எடை : எரிபொருள் இல்லாத ராக்கெட்டு ஊர்தியின் எடை

dry weight of an engine : (வானூ.) உலர் எடைமானம் : ஒர் எஞ்சினின் எடைமானம். இதில் எரி-வளி கலப்பி, முழு மூட்ட அமைப்பு முற்செலுத்தி, குறைப்புப் பல்லிணை ஆகியவை உள்ளடங்கும். ஆனால், வெளியேற்றுப் பெருங்குழாய்கள், எண்ணெய், நீர் ஆகியவை உள்ளடங்காது. எஞ்சினின் ஒரு பகுதியாக முடுக்கு கருவியும் அமைக்கப்பட்டிருக்குமாயின் அதனையும் உள்ளடக்கும்

dry well ; (கம்..) உலர் குழி: தரையில் கல்பாவிய ஒரு பள்ளம்; அதில் சுற்றுப்புற மண்ணில் பாயும் கழிவு நீர் அல்லது சாக்கடைத் திரவங்கள் கசிந்து தேங்கும்

dry wood :உலர் மரம்: பதப்படுத்துவதன் மூலம் சாறு அகற்றப்பட்ட வெட்டு மரம்

dryer : உலர்த்தி : மென்பூச்சுமானத்திலிருந்து ஈரப்பதனை அகற்றுவதற்குப் பயன்படும் உலர்த்து எந்திர வகை

drying : (வார்.) உலர்த்தல் : ஒரு வார்ப்படத்தில் சூடான காற்றினை உட்செலுத்தி ஈரப்பதத்தை ஆவியாகச் செய்து உலர்த்தும் செய்முறை