பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
241

duplex telegraphy : இரட்டைத் தந்தி முறை : இருபுறமும் ஒரு கம்பி யின் மூலம் செய்தி அனுப்பப் பெறும் தந்தி அம்மைப்பு

duodecimo : பன்னிரு மடிப்புத் தாள் : பன்னிரண்டாக மடிக்கப்பட்ட (13x19செ.மீ) தாள் மடிப்பு

duograph : (அச்சு.) இரட்டை நுண்படப் பதிவு: ஒரே படியிலிருந்து தயாரிக்கப்பட்ட இரு நுண் பதிவுப்படத் தகடுகள். இதில் ஒன்று கருமையாகவும், இன்னொன்று மெல்வரிப் பின்ன வண்ணச் சாயலுடனும் அச்சடிக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு திரைக் கோணங்களுடன் தயாரிக்கப்படும் இரு தகடுகள்

duotone : (அச்சு.) இரட்டை வண்ண நுண்பதிவு: ஒரு வண்ணத்தில் அச்சடித்த் காகித்த்தில் மை உலர்ந்தவுடன் இருவேறு வண்ணங்களில் அச்சடித்ததுபோல் தோற்றமளிக்கும் ஒருவகை மை

dயotype : (அச்சு.) இரட்டை அச்செழுத்து : ஒரே படியிலிருந்து தயாரிக்கப்பட்ட் இரு நுண்பதிவுப் படத் தகடுகள். இவற்றில் வெவ்வேறு விதமாக செதுக்குருச் செய்யப்பட்டிருக்கும்

duplex carburetor : (தானி.) இரட்டைஎரி-வளி கலப்பி : கலவைப் பகிர்மானத்திற்காக இரட்டை அமைவுடைய எரி-வளி கலப்பி

duplex printing : இரட்டை அச்சடிப்பு : ஒரு துணியின் இருபக்கங் களிலும் ஒரு துணியின் இருபக்கங்களிலும் ஒரு தோரணியை அச்சடிக்கும் முறை

duplex steel : (உலோ.)இருமடி எஃகு : காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பாய விட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்குகின்ற பெஸ்ஸமர் முறைப்படித் தயாரித்த எஃகினை மேலும் அடிப்படைத் திறந்த உலையில் சுத்திகரித்துத் தயாரிக்கப்படும் மலிவான குறைந்த அளவு கார்பன் கொண்ட எஃகு. இரண்டாம் சுத்திகரிப்பானது, ஒரு மின் உலையில் செய்யப்படுமாயின் கிடைக்கும் இரும்பு அதிகத் தரமுடையதாக இருக்கும்

duplicate : இருமடிப் பகர்ப்பு : மூலப்படியை அப்படியே பகர்த்துப் படியெடுத்தல்

duplicate part : நிகரொத்த உறுப்பு : ஒர் உறுப்புக்கு நிகரொத்த மற்றொரு உறுப்பு

durability : (க.க.) உழைப்புத் திறன் : நெடிய கடினமான பயன் பாட்டிற்குத் தாக்குப் பிடிக்கும் திறன்

duralumin : (வானூ.) வவிவலுமினியம் : விமானம் முதலியவற்றிற் குப் பயன்படுத்தப்படும் வலிமையும் கடினமும் வாய்ந்த அலுமினியக் கலவைப் பொருள். இதில் 3.5% - 4.5% செம்பும், 0.4% - 1% மாங்கணிசும், 2 % - 0.75% மக்னீசியமும், 92 % அலுமினியமும், கலந்திருக்கும். இதன் இறுதி விறைப்பாற்றல் - 55,00 பவுண்டு / ச.அங். நெகிழ்திறன் வரம்பு 30,000 பவுண்டு / ச.அங். வீத எடைமானம் - 2.85 க்கு மேற்படாமல்

dur iron : (உலோ.) டூர் இரும்பு : சிலிக்கன் செறிவு மிகுதியாகவுள்ள இரும்பின் வாணிகப்பெயர். இது அமிலத்தை எதிர்க்கும் தன்மையுடையது. எனவே, ஆய்வுக் கூடங்களுக்கு வடிகுழாய்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது

dust bottom : தூசுப்படிவு அடித்தளம் : இரு இழுவறைகளிடையே மெல்லிய் மரப்பலகை

dutch arch : டச்சுக் கவான் : உச்சியிலும் அடித்தளத்திலும்