பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

255

தின் எல்லாப் பகுதிகளிலிருந்து மின்னோட்டத்தை துண்டிப்பதற்காக மின் நிறுவனத்தின் மானிக்குமேலாக இணைக்கப்பட்டுள்ள ஓர் இணைப்பு விசை

emery : குருந்தக்கல் : சானை பிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிமம். இது அலுமினியா இரும்பு, சிலிக்கா, சுண்ணாம்பு ஆகியவற்றின் ஆக்சைடினாலானது. இது உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது

emery cloth : தேய்ப்புத்துணி : உலோகப் பரப்புகளைத் தேய்த்து மெருகேற்றுவதற்குப் பயன்படும் குருந்தக்கல் தூள் பூசிய துணி

emery paper : (க.க.) தேய்ப்புத்தாள் : உப்புத்தாள் : உலோகங்களுக்கு மெருகேற்றுவதற்குப் பய்ன்படுத்தப்படும் குருந்தக்கல்தூள் பூசிய தாள்

emery wheel : (எந்.) சாணைக்கல் : சாணை பிடிப்பதற்காகக் குருந்தக்கல் ஒட்டப்பட்ட சக்கரம். இதனை வேகமாகச் சுற்றிச் சாணை பிடிக்கப்பயன்படுத்துவர்

emission : (மின்.) ஒளி வெளிப்பாடு: ஒரு பரப்பிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளிப்படுதல் emission theory : ஒளி வெளிப்பாட்டுக் கோட்பாடு : "ஒளிவிடு பொருள்களின் நுண்ணிய பகுதிகளிலிருந்து ஒளிவெளிப்படுகிறது" என்னும் கோட்பாடு

emissivity : (குளி.பத.) ஒளிவெளிப்பாட்டுத் திறன் : ஒரு பரப்பிலிருந்து கதிரியக்கம் மூலம் வெப்பம் வெளிப்படுத்தப்படும் திறன்

empennage : (வானூ.) வால் பரப்பு : விமானத்தின் வால் பகுதியின் பரப்புகள்

empirical rule : (பொறி.) அனுபவ விதிமுறை : முற்றிலும் கணித அல்லது இயற்பியல் வழியில் அல்லாமல், செயலறிவின் அல்லது அனுபவத்தின் அடிப்படையிலமைந்த ஒரு விதி முறை அல்லது சமன்பாடு

e.m u. : (மின்.) மின்காந்த அலகு (இ.எம்.யூ.) : மின்காந்த அலகுகளைக் குறிப்பிடும் பன்னாட்டு அடிப்படை அளவு

emulsification : (குளி.பத) திரவக் குழம்பு : ஒன்றில் ஒன்று. கரையாத இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட திரவங்களின் கலவை

emulsify : (குழை) குழம்பாக்கு : ஒரு திரவத்தில் நேர்த்தியாகக் குழம்பாக்கிய நிலையில் ஒரு பொருளை மிதக்கவிடுதல்

emulsion : (ஒளி.) பசைக் குழம்பு : ஒளிப்படத் தகடுகளுக்கும். படச்சுருளுக்கும் பயன்படும் வெள்ளி உப்புக் கலவை

en : (கம்.) 'என்' அலகு : அச்சுக்கோப்பதில் உள்ள ஓர் அகல அளவு. இது 'எம்' அலகில் ஒரு பாதி

enamel : எனாமல் : வண்ணமாகிப் பூசப்படும் ஒரு பொருள். இந்தப் பூச்சு காய்ந்தவுடன் கடினமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்

enameled : காகித மெருகு : காகிதத்திற்கு மிக நேர்த்தியாகப் பளபளப்பு மெருகேற்றுதல்

enameled brick : (க.*க) மெருகேற்றி செங்கல் : எனாமல் போன்று நன்கு பளப்பளப்பாக மெருகேற்றிய செங்கல்

enameled wire : (மின்.) மெருகேற்றிய மின்கம்பி : மின்காப்பு எனாமல் மூலம் மெருகு பூசப்பட்ட கம்பி. இது பெரும்பாலும்