பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
267

false key : போலி இருசாணி : ஒரு பாதி ஒரு கதிரின் முனையிலும் இன்னொரு பாதி குமிழாகவும் துரப்பணம் செய்யப்பட்டுள்ள ஒரு துவாரத்தினுள் செலுத்தப்படும் ஒரு வட்ட வடிவமுளை

இருசானி

false rafter : (க.க.) போலி இறை வாரக்கை : ஓர் எழுதகத்தின் மேலுள்ள பிரதான வாரக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குறுகிய விரிவாக்கம்

falsh wing rib : (வானூ.)இறக்கைக் குறுக்குக் கை : முழுமையற்ற குறுக்குத் கை. இது, விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் வளைவு கூர்மையாக இருக்கும் இடத்தில் சிறகின் வடிவத்தைப் பராமரித்து வருவதற்கு உதவப் பயன்படுத்தப்படும் முன்புறக் கழிக்கு முனைப்பு முனையிலிருந்து நீண்டு செல்லும் மரத்துண்டினை மட்டும் கொண்டுள்ளதாக இருக்கும்

false work : (பொறி.) போலிச்சட்டகம் : கட்டுமானத்தை முடிவுறுத்துவதற்குப் பயன்படும் தற்காலிகச் சட்டகம் அல்லது ஆதாரம்

family : (அச்சு.) அச்செழுத்துக் குடும்பம் : பல்வேறு வடிவளவுகளிலுள்ள முகப்புகள் கொண்ட தொடர்புடைய அச்செழுத்துக்களை வகைப்படுத்துதல்

fan belt : (தாணி.) விசிறி வார்ப்பட்டை : குளிர்விக்கும் விசிறி, மின்னாக்கி, நீரேற்றும் எந்திரம் ஆகியவற்றை இயக்குவதற்கான வார்ப்பட்டை

fan blower : ஊது விசிறி : காற்றோட்டத்தை உண்டாக்குவதற்கான சுழல் விசிறி. வேதியியற் பொருட்களிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகைகளை வெளியேற்றுவதற்கும் இது பயன்படுகிறது

fancy rule : (அச்சு.) சித்திர இடைவரித் தகடு : பல்வேறு சித்திர வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள பித்தளை இடைவரித் தகடு

fan dango : கட்டுமான அட்டை : புத்தகங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பயன்படும் அட்டையின் வாணிகப் பெயர்

fan bolt : (பொறி.) விசிறி மரையாணி : வெட் டு மரத்துடன் இரும்பு வேலைப்பாட்டினை இணைத்திடப் பயன்படும் மரையாணி. இந்த மரையாணி, மரத்தைக் கல்விக் கொள்வதற்கேற்பப் பற்களைக் கொண்டிருக்கும்

fan out : (அச்சு.) விசிறிப் பிரிப்பு : அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்காகத் தாள்களைத் தனித் தனியாகப் பிரித்திடும் முறை

fan pulley : (தானி.) விசிறிக்கப்பி : விசிறியை இயக்கும் வார்ப்பட்டையை முடுக்கிவிடுவதற்காக, விசிறியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கப்பி. உந்து வண்டிகளில் காற்றோட்டம்- உண்டாக்குவதற்கும், மின்னாக்கியைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது

farad : (மின்.) ஃபாரட் : மின்திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. ஒரு ஃபாரட் திறனுள்ள கொண்மியில், ஒரு கூலோம் அளவின் மூலம் ஒரு ஓல்ட் மின்னழுத்தத் திறன் ஏற்றப்படும். நடைமுறைப் பணிகளில் இது மிகப் பெரிய அலகு. இது 'நுண்ஃபாரட்' அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது

faraday, michael : ஃபாரடே, மைக்கேல், (1791-1867) : ஆங்கி