பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

சுத்தம் செய்வதற்காக அமைக்கப்படும் முகப்புப் பூண்

fertilizer : (வேதி.) உரம் : மண் வளத்தைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதியியற் பொருட்களின் கலவை

festoon : (க.க.) தோரணம் : மலர் மாலைகள், மலர் வளையங்கள், பசும் இலைகள் இவற்றைக் கொண்டு அலங்காரமாகக் கட்டப்படும் தோரணங்கள்

f-head engine : (தானி.) எஃப்-முகப்பு எஞ்சின் : எல்-முகப்பும், ஐ-முகப்பும் இணைந்த எஞ்சின், இதில் உள்ளிழுப்பு ஓரதர்கள் மேற்பகுதியிலும், வெளியேற்று ஓரதர்கள் நீள் உருளைத் தொகுதியிலும் அமைந்திருக்கும்.இந்த வகை எஞ்சின்கள் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை

முகப்பு எஞ்சின்

fiber: இழை/இழைமம் : நூற்பதற்கும் நெசவு செய்வதற்கும் ஏற்ற கடினமான இழை

fiber-glass : (குழை.) கண்ணாடி இழை : கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள்

fibrous : இழைமத் தன்மையதான : உலோகங்களுக்குள்ள இழைமைத் தன்மை; இது குருணை இயல்பிலிருந்து மாறுபட்டது

fibrous tissue : (உயி.) நார்ப்பொருள் திசு : உடலின் தசைகளை ஒன்று சேர்த்து, எலும்புகளுடன் தசைகளை இணைத்திடும் வெள்ளை நிற நாரியற் பொருள். இது தோலின் அடிப்படலமாக அமைந்துள்ளது. தசையில் காயம் பட்டால், சேதமுற்ற தசையைச் சீர்படுத்திக் காயத்தை ஆற்றுவதும், காயம்பட்ட இடத்தில் வடு ஏற்படுவதற்கும் இதுவேகாரணம். மஞ்சள் நார்ப் பொருள் திசுவும் இது போன்றதே, ஆனால் இது மிகுந்த நெகிழ்திறனுடையது; இரத்த நாளங்களின் தமனி சுவர்களில் இது உள்ளது

fiddle back : பிடில் முதுகு நாற்காலி : வாத்தியக் கருவியின் வடிவில் முதுகுப் பகுதியைக் கொண்ட ஒரு வகை நாற்காலி

fidelity : (மின்.) முற்றுருப் படிவாக்கம் : மின் சைகைகளை சற்றும் திரிபடையாமல் அப்படியே மீண்டும் உருப்படிவாக்கம் செய்து அனுப்பீடு செய்தல்

field : (மின்.) புலம் : (1) மின்காந்த ஆற்றல் களம் (2) தொலைக்காட்சியில், இறுதிப்படத்தின் ஒரு பகுதியாக அமையும் நுண்ணாய்வு வரிகளின் ஒரு தொகுதி. இப்போதையத் தர அளவுகளின்படி, மாற்று வரி களைக்கொண்ட இரு புலங்களில் படங்கள் அனுப்பப்படுகின்றன. வினாடிக்கு 30 முழுமையான படங்கள் உருவாகும் வகையில் 525 வரிகள் கொண்ட படம் அமைகிறது

field book : (மின்.) களப்புத்தகம் : பொறியாளர்களும், மற்றவர்களும் பணிபற்றிய குறிப்புகள் எழுதுவதற்குப் பயன்படுத்தும் ஒரு புத்தகம்

field coil : (மின்.) புலச் சுருள் : ஒர் இயக்கத்தின் அல்லது மின்னாக்கியின் புலக்காந்தங்களை அல்லது துருவத் துண்டுகளைச் சுற்றி அமைந்துள்ள சுருள் அல்லது சுற்றுச்சுருள்

field core : (மின்.) புல மையம் : ஒரு மின்னாக்கியின் அல்லது இயக்கியின் புலச்சுருள் சுற்றப்படுகிற இரும்பு நீட்சி