பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

flare : கதிரொளி : உருவ நோக்காடியில் நுண்ணாய்வு முனைகளில் ஒளி குறைவாக இருக்கும் போது உண்டாகும் வெண்ணிறச் சைகை. அதிக ஒளியும் இருளும் நிறைந்த பொருட்கள் அருகருகே இருக்கும்போது வரம்பிற்கு அப்பால் உண்டாகும் ஒளி

flash : (குழை.) அழற்பாய்ச்சல் : (1) கண்ணாடி வார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப் பாய்ச்சுதல்

(2) வார்ப்படத்தில் வேகமாகப் பாய்ந்து பெருகும் மிகுதியான வார்ப்படப் பொருள்

(3) தடைப் பற்றவைப்பில் இணைப்பிலிருந்து வெளியேற்றப்படும் உலோகமும் ஆக்சைடும்

flash butt welding : சுடர்முறை முட்டுப் பற்றவைப்பு : இது தடை முட்டுப் பற்றவைப்பு முறையாகும். இதில், உறுப்புகள் ஒன்றையொன்று தொடுவதற்கு முன்னர் மின்னழுத்த நிலை உண்டாக்கப்படுகிறது. அப்போது, பற்றவைக்கப்படும் உறுப்புகளுக்கிடையிலான தொடர்வரிசைச் சுடர்களிலிருந்து வெப்பம் உண்டாகிறது

flash-dry ink : (அச்சு.) சுடர் முறை உலர்மை : செயற்கை வண்ணங்களிலிருந்தும் கோந்துகளிலிருந்தும் தயாரிக்கப்படும் மை. உருளைகளிலிருந்து வெளிவரும் அச்சிட்ட தாளில் உள்ளமை தீவிர வெப்பம் காரணமாக உடனடியாக உலர்ந்து படிகிறது

flasher : (மின்.) மின்னொளிர்வான் : சில மின் சைகைகளில் உள்ளது போன்று விளக்குகளில் ஒளி தோன்றித் தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு

flash tube : (மின்.) சுடரொளி குழல்விளக்கு : மிகவும் பிரகாச மான சுடரொளியை உண்டாக்கும் மின்னியல் விளக்கு

flashing : (க.க. ) கூடல் தகடு : மழைநீர் உள்ளே கசியாமல் விலக்குவதற்காக மோட்டின் கூடல் வாய்களிற் பொருத்தப்படும் உலோகத் தகடு

flashing light : (வானூ.) ஒளிர்விளக்கு : ஒரு திசையிலிருந்து பார்க்கும்போதும் விட்டுவிட்டு ஒளிரும் விளக்கு

flashing over : (மின்.) பாய்ச்சல் மின்னோட்டம் : ஓர் எந்திரம் இயங்கும்போது ஒரு திசைமாற்றியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மின்னோட்டம் பாய்வதைக் குறிக்கும் சொல். இது, திசைமாற்றியின் தவறான மின்காப்பு காரணமாக, குதித்து குதித்துச் செல்லும் நெருப்பு வளையம் போல் இருக்கும்

flash light : (மின்.) மின்பொறிக் கை விளக்கு : பசை மின்கலங்கள் மூலம் இயங்கும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய மின்பொறி விளக்கு

flash light powder : (வேதி.) மின்னொளித் தூள் : மெக்னீசியத்தூள் இரு பங்கும், பொட்டாசியம் குளோரைடுத்துள் ஒரு பங்கும் கலந்த ஒரு கலவைத்தூள்

flash lines : (குழை.) சிதறுவரிக் குறிகள் : வார்ப்படத்திலிருந்து மிகையான வார்ப்படப்பொருள் வழிந்து வடிந்த வரிக்குறிகள்

flash mould : (குழை.) சிதறல் வார்ப்படம் : இறுதி அடைப்பின் போது மிகையான வார்ப்படப் பொருள் வழிந்தோடுவதற்கு அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வார்ப்படம்

flash point : தீப்பற்று நிலை : தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்ப நிலை