பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
285

அனைத்திலிருந்தும் விடுபட்டுள்ள சுழல் தண்டுடைய அச்சு

floating power : (தானி.) மிதவை விசை : எஞ்சினின் அதிர்வினை ரப்பர் திண்டுகள் தாங்கிக் கொள்ளும் வகையில் சட்டகத்தில் எஞ்சினை ஏற்றியமைக்கும் முறை

floating ribs : (உட.) நிலை பெயர்வு விலா எலும்புகள் : நெஞ்சு எலும்புடனோ மற்ற விலா எலும்புகளுடனோ இணையாமலிருக்கிற 11ஆவது, 12ஆவது விலா எலும்புகள்

floating tool : (எந்.) மிதவை கருவி : வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் கருவியானது, வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் மீது மிதந்தவாறே இயங்கிச் செல்லும் அமைப்புடைய கருவி

float switch : (மின்.) மிதை மின்விசை : ஒரு மிதவை மூலம் தொடுக்கவும் விடுக்கவும் பயன்படும் ஒரு மின்விசை. இது தொட்டியில் திரவத்தின் மட்டத்திற்கேற்ப ஏறி இறங்கும்

float system : (வானூ.) மிதவையமைப்பு : கடல் விமானத்திற்கு அல்லது ஒரு பறக்கும் படகிற்கு அது மிதப்புத் தன்மையினையும், உறுதிப்பாட்டினையும் அளிக்கவும், உயரே எழும்போது நீரியல் இயக்க ஏந்துவிசையளிக்கவும் பயன்படும் நிரந்தரமான மிதவைகளின் அமைப்புமுறை

float trap : மிதவைப் பொறியமைப்பு : வடிவாலையில் காற்று உள்ளே செல்லவும் நீராவியை இறுத்தி வைத்துக்கொள்ளவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ள உட்புழையுள்ள உலோக மிதவையினால் இயங்கும் ஓரதர்

float valve : (கம்.) மிதவை ஓரதர் : கழிப்பிடத் தொட்டியில் பயன்படுத்தப்படுவது போன்ற ஓர் ஓரதர். மேற்பரப்பில் மிதக்கும் ஓர் உட்புழையுள்ள உருண்டை நீர் உட்புகுந்ததும் அடைத்துக் கொள்கிறது

flock : (நூற்பு.) குஞ்சம் : கம்பளி மயிர்க் கழிவு அல்லது கிழிந்த துணிகளினாலான குஞ்சம்

flong : (அச்சு.) பதிவச்சுத் தாள் : பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள். இந்தத் தாள் படிவத்தில் உருகிய உலோகம் குளிர்ந்த அச்சுப்படிவப் பக்கங்கள் கிடைக்கின்றன

flooding : (தானி.) மிகை எரி பொருள் : கலவையை அதிக அளவில் எஞ்சினுள் செலுத்துதல். இதனால் எஞ்சினை இயக்குவதில் சிரமம் ஏற்படும்

flood light : (மின்.) பேரொளி : நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப் பெருக்கு

floor : (க.க.) (1) தளம் : ஒரு கட்டுமானத்தில் அல்லது கட்டிடத்தில் ஒருவர் நடப்பதற்குரிய பகுதி

(2) தள அடுக்கு : விட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று. இவற்றை கீழ்த்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என அழைப்பர்

floor chisel : (மர;வே.) தள உளி : தள அட்டைகள் முதலியவற்றை அகற்றுவதற்குப் பயன்படும் 5-7.5.செ.மீ. அகல விளிம்புள்ள எஃகு உளி