பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
287

புறவூதாக்கதிர்கள் உமிழொளிர்வுப் பொருளைத் தூண்டி ஒளியூட்டுகிறது

fluorescent paint : (வண்.) ஒளிர்வுறு வண்ணம் : புறவூதா அல்லது 'கறுப்பு' ஒளியில் செயலூக்கம் பெற்று ஒளிவிடும் வண்ணம்

fluorescent substances : ஒளிர்வுறு பொருள்கள் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் புலனாகும் ஒளியின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடும் பொருள். எடுத்துக்காட்டு: தொலைக்காட்சித் திரை

flourine : (வேதி.) ஃபுளோரின் : நிறமற்ற, அரிக்கும் தன்மையுள்ள நச்சு வாயு. நீர் நீக்கப்பட்ட ஹைட்ரோபுளோரிக் அமிலத்தை மின்னால் சிதைத்து வடித்தல் மூலம் இது பெறப்படுகிறது

fluorite or flour spar : ஃபுளோரைட் அல்லது மணியுருப்படிகம் : மணியுருப் படிக வடிவத்தில் கிடைக்கும் கால்சியம் ஃபுளோரைடு என்னும் கனிமப் பொருள். அமெரிக்காவில் கென்டக்கி, இலினாய்ஸ் மாநிலங்களில் கணிசமாகக் கிடைக்கிறது. உராய்வுச் சக்கரங்கள் தயாரிப்பில் எளிதில் உருகும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது

fluoro Carbons : (குழை.) ஃபுளோரோ கார்பன் : பிளாஸ்டிக் அணுக்கள். இதில் கார்பனும், ஃபுளோரினும் அடங்கிய மூலக் கூற்றுக் கட்டமைவு அமைந்திருக்கும். இது வேதியியல் பொருட்களின் தாக்குதலைத் தடுக்கும் திறனும், உயர்ந்த வெப்பநிலைப்பாட்டுத் திறனும், மின்னழுத்தத்தைத் தாங்கும் திறனும் உடையது. எனினும், இதன் பசையற்ற தன்மைக்கும், குறைந்த உராய்வுத் திறனுக்குமே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகள், வளையங்கள், மின்சாதனங்கள், நாடாக்கள் முதலியன தயாரிக்க இது பயன்படுகிறது

fluoroscopy : (மின்.) உமிழொளி கணிப்பு : ஒளி ஊடுருவிச் செல்லாத பொருள்களை ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) மூலம் ஆராய்வதற்குப் பயன்படும் நுட்பம். பொருளின் வழியாக ஊடுகதிர் சென்று ஒரு வண்ண ஒளிகாலுகிற திரையில் உடனடியாகப் பிம்பத்தை உண்டாக்குகிறது

flush : (பட்.) நேர்தள பரப்பு : தடைபடாத சரிசமமான நேர்தளப் பரப்புடைய உறுப்புகள் எனப்படும்

flush bolt : நேர்தள மரையாணி : எதிர் துளையிட்ட துவாரத்தினுள் நுழைவதற்கேற்ப தலை அமைந்துள்ள ஒரு மரையாணி. இதன் தலைப்பகுதி அது செருகப்படும் தட்டின் முகப்புக்குச் சமதளத்தில் இருக்கும்

flush head rivet : நேர்தளத் தலைத் தரையாணி : செலுத்தப்படும் தட்டின் தளப்பரப்புக்குமேல் நீட்டிக்கொண்டிராதவாறு தலைப் பகுதி அமைந்துள்ள ஒரு தரையாணி

flush receptacle : (மின்.) நேர்தளக் கொள்கலம் : சுவரில் உள்ளமைவாகப் பொருத்தப்பட்டிருக்கும் காப்பிட்ட பிணைப்பூசி அல்லது திருகு வகையான கொள்கலம். இதில், தகடு மட்டுமே மேற்பரப்புக்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும்