பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
289

வாட்டில் உறுதிப்பாடு அளிப்பதற்கு இறகுகளின் முனைகளில் மிதவைகள் அமைக்கப்பட்டிருக்கும்

flying bomb : பறக்கும் குண்டு : ஆளில்லாமல் இயக்கப்படும் தரை விமான வடிவிலான வான்செல் வெடிகுண்டு

flying buttress : (க.க.) உதை கால் வளைவு : உயர் கட்டுமானங்களுக்குச் சுவரின் மேற்பகுதியிலிருந்து ஆதாரம் கொண்டு செல்லும் அடிவளைவுடன் கூடிய உதை கட்டுமானம். பண்டைய ஜெர்மானியப் பாணிக் கட்டிடக் கலையில் இந்த அமைப்பு பெருமளவில் இடம் பெற்றிருக்கும்

flying saucer : பறக்கும் தட்டு : வானில் அவ்வப்போது மிகுந்த உயரத்திலும் பெருவேகத்திலும் பறந்து செல்வதாகத் தெரியவரும் தட்டுப் போன்ற ஒளி வடிவம்

fly leaf : (அச்சு.) திறவுப் பக்கம் : கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறம் அல்லது பின்புறம் உள்ள வெற்றுத் தாள்

fly over : மேம்பாலம் : போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களில் பெரும் பாதைக்கு மேலாகக் கிளைப்பாதையைக் கொண்டு செல்லும் பாலம்

fly title : திறவுத் தலைப்பு : உண்மையான தலைப்புப் பக்கத்திற்கு முன்புள்ள பக்கத்திலுள்ள புத்தகத் தலைப்பு. இதனைக் குறுந்தலைப்பு என்றும் கூறுவர்

fly wheel : (எந்.) சமனுருள் சக்கரம் : எந்திரத்தில் ஒரே சீரான இயக்கம் ஏற்படுவதற்காக - எதிரீட்டு இயக்கத்தினை சுழல் இயக்கமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கனமான சக்கரம்

fly wheel marking : (தானி.) சமனுருள் சக்கரக் குறியீடு : ஒரு சமனுருள் சக்கரத்தின் மேற்பரப்பிலுள்ள அளவுக்குறிகள். இது எஞ்சினில் ஓரதரின் இயக்கம் சரியான நேரத்தில் நடைபெறச் செய்வதற்கான வழிகாட்டியாகப் பயன்படுகிறது

F.numbers : (ஒளி.) F எண்கள் : ஒளிப்படக் கருவிகளில் இடையீட்டுத் திரையின் திறப்பு வடிவளவுகளைக் குறிக்கும் எண்கள். எடுத்துக்காட்டு; F-4,5; F-5.6; முதலியன

foamed plastics : (குழை.) கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள் : திண்மமாகவோ நெகிழ்வாகவோ கடற்பஞ்சு போன்று உருவாக்கப்பட்ட பிசின்கள். பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகளில் கடற்பஞ்சுகள் தயாரிக்கப்படுகிறது. மின் காப்பிடுவதற்கு திண்மக் கடற்பஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன; மிதவைகளில் இது பயன்படுகிறது. மெத்தை-திண்டு வேலைப்பாடுகளில் நெகிழ்வுக் கடற்பஞ்சு பயன்படுகிறது. யூரித்தேன் கடற்பஞ்சு, பிளாஸ்டிக் கடற்பஞ்சுக்கு உதாரணம் (பார்க்க: ஐசோ சையனேட்.)

F.O.B : கலத்தில் ஒப்புவிப்பு : சரக்குகளைக் கட்டணமின் கப்பல் தளம் வரையில் அல்லது பிறஊர்திகள் வரையில் கொண்டு வந்து ஒப்புவிப்பது குறித்த ஒப்பந்தம்

foci : குவிமையங்கள் : ஒரு நீள் உருளை வடிவின் முனை வளைவுகள் இந்த மையங்களிலிருந்து வரையப்படும்

foil : (க.க) பலகணி வளைவு : பலகண விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு. இது விளிம்பிடை வளைவுப் பள்ளம் உருவாக்கி ஒப்பனை செய்யும் ஒரு முறை