பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

free balloon : (வானூ.) தடையிலாப் பலூன் : ஒரு கோள் வடிவப் பலூன். இதன் ஏற்றமும் இறக்கமும் அடிச்சுமை அல்லது வாயு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பலூன் பறக்கும் திசை காற்றினால் தீர்மானிக்கப்படுகிறது

free burning coal : எளிதில் எரியும் நிலக்கரி : இந்த நிலக்கரி எரிந்தாலும், ஒன்றாக இணைந்து இளகுவதில்லை; மாறாகச் சூடாகும் போது ஒரு பசைத் திரள் உண்டாகிறது

free burning mixture : (தானி.) எளிதில் எரியும் கலவை : எடையில் காற்றைப் போல் பெட்ரோலின் 12-16 மடங்கு அல்லது கன அளவில் காற்றைப்போல் 9,000 மடங்கு கொண்ட ஒரு கலவை; அதன் பொருள் திரட்சியில் எங்கு தீப்பற்றினாலும் அந்தத் திரள் முழுவதிலும் ஒரே சமயத்தில் தீப்பற்றி எரியக்கூடியது

free end : தனி இயக்க முனை : ஒற்றைத் தாங்கியில், எதனுடனும் பொருத்தப்படாமல் தனித்து இயங்கக்கூடிய முனை

free fit : (எந்.) தன்னியக்கப் பொருத்திகள் : எந்திர உறுப்புகள் தங்குதடையின்றி இயங்குவதற்கு அனுமதிக்கும் பொருத்திகள்

free flight rocket : (or.) தன்னியக்க ராக்கெட் : மின்னணுவியல் கட்டுப்பாடு அல்லது வழிச் செலுத்தம் இல்லாமல் பறக்கும் ராக்கெட்

freehand : கை வரைவு : கருவிகளின்றி இயல்பாகக் கையினால் வரைதல்

freestone : (க.க.) மாக்கல் : பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல் வகை

free wheeling : (தானி.) இயல்புச் சக்கர இயக்கம் : இரண்டாவது உயர் பல்லிணை ஒருங்கிணைப்பில் பொருத்தப்பட்டுள்ள விஞ்சியோடும் ஊடிணைப்பி. இது, எஞ்சின் வேகம் எவ்வாறிருப்பினும், எளிதாக இயங்குவதற்கு அனுமதிக்கிறது

freezer : (குளி.பத.) உறைவுச் சாதனம் : அழுகும் பொருள்களை உறையவைக்கும் ஒரு சாதனம். இது பொதுவாக 30°F வெப்ப நிலைக்குக் குறைவாக வெப்பமுள்ள ஒரு குளிர் சேம அறையாக இருக்கும்

freezing-mixture : உறைவுக் கலவை : பொருட்களை உறையும்படி செய்யும் கலவைப் பொருள்

freezing point : (குளி.பத.) உறைநிலை : ஒரு திரவம் உறைந்து திடப்பொருளாகும் வெப்பநிலை

french curve : வளை கோடு வரைவான் : கவான்கள் அல்லாத வளைகோடுகளை வரைவதற்கு வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி. இதனைப் பொதுமுறை வரைகோடு வரைவான் அல்லது சீரற்ற வளைகோடு வரைவான் என்றும் கூறுவர்

french fold : (அச்சு.) ஃபிரெஞ்சு மடிப்பு : செங்குத்தாகவும் கிடைமட்டத்திலும் காகிதத்தை மடித்தல்

french folio : (அச்சு.) ஃபிரெஞ்சு மென்தாள் : பார்வைப் படிகள் எடுப்பதற்குப் பயன்படும் இலேசான எடையுடைய மெல்லிய தாள்

french seam : ஃபிரெஞ்சுத் தையல் விளிம்பு : நிமிர் நேர்வான தையல் மூட்டுவாய்

french window : (க.க.) ஃபிரெஞ்சுப் பலகணி : இரட்டைப்