பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

கம் என்ற இலக்கத்தினால் பெருக்கிய விசைக்குச் சமம். உராய்வுக் குணகம் வெவ்வேறு பொருள்களுக்கும், வெவ்வேறு மேற்பரப்பு களுக்கும் வெல்வேறு அளவில் இருக்கும்

friction calender : (தாள். ) உராய்வு உருளை : காகிதத்தை மழமழப்பாக்குவதற்கு வெவ்வேறு வடிவளவுகளில் உருளைகளைக் கொண்ட ஓர் எந்திரம்

friction catch : (அக.) உராய்வுப்பற்றுக்கொளுவி : அறைகலன்களின் சிறிய கதவுகளைப் பூட்டாமல் இறுக மூடிவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சாதனம். இதில் ஒரு வில் சுருளும் நுழைவு குண்டலமும் அமைந்திருக்கும்

friction coupling : (எந்.) உராய்வு இணைப்பி : உராய்வுத் தொடர்பு மூலம் செயற்படும் இணைப்பிகளின் வகையைச் சேர்ந்த ஒன்று

friction disk : உராய்வு வட்டு : உராய்வு இயக்கமுடைய ஒரு வட்டு

friction drive : (எந்.) உராய்வு இயக்கி : உராய்வுத்தொடர்புமூலம் விசையை அனுப்பீடு செய்தல்

friction feed : (கணிப்.) உராய்வு ஊட்டுமுறை

friction of motion : (எந்.)இயக்க உராய்வு : ஒரு சமதளப் பரப்பில், திட, கோள அல்லது நீள் உருளைப் பொருள் எதனையும் இயங்கச் செய்தபின் அது தொடர்ந்து இயங்கும்படி செய்வதற்காக விசையினால் கட்டுப்படுத்தவேண்டிய உராய்வு

friction of rest : (எந்.) ஆதார உராய்வு : திட, கோள அல்லது நீள் உருளை வடிவப்பொருள் எதனையும் ஒரு சமதளப் பரப்பில் சறுக்கி அல்லது உருண்டு செல்லும்படி செய்வதற்கு விசையினால் கட்டுப் படுத்தவேண்டிய உராய்வு

friction tape : (மின்.) உராய்வு நாடா : மின் கடத்திகளில் புரியிணைவினைப் பாதுகாப்பதற்குத் தேவைப்படும் ரப்பர் நாடாவைக் காப்பிட்டு வைப்பதற்குப் பயன்படும் செறிவூட்டிய பஞ்சினாலான மின்காப்பு நாடா

friction wheel : உராய்வுச் சக்கரம் : உராய்வு மூலம் இயக்கப்படும் சக்கரம். இதில், வழுவழுப்பான அல்லது வரிப்பள்ளமிட்ட பரப்புகளிடையில் மட்டுமே தொடர்பு ஏற்படும்போது இயக்கம் உண்டாகிறது

friesland design : ஃபிரிஸ்லாந்து வடிவமைப்பு : ஆலந்து நாட்டிலுள்ள ஃபிரிஸ்லாந்து பகுதியில் தட்டையான செதுக்குப் பரப்பில் செய்யப்படும் கோண மற்றும் வட்ட வடிவமைப்பு

frieze : (க.க.) ஒப்பனைப் பட்டை : கட்டிடத்தில் தூணுக்கு மேலுள்ள சிற்ப வேலைப்பாடுள்ள பகுதி. ஒரு சுவருக்குச் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள எழுதகத்தின் கிடைமட்ட உறுப்பு

frise aileron : (வானூ.) மிகு இழுவைச் சிறகு : அச்சுக்கு முன்னதாக மூக்குப்பகுதியையும், சிறகின் கீழ்ப் பரப்புக்குச்சமநிலையில் கீழ்ப்பரப்பினையும் கொண்டுள்ள விமானச் சிறகின் ஓரமடக்கு. இதனை இழுத்துச் செல்கிற முனை உயர்த்தப் படும்போது, மூக்குப்பகுதி, சிறகின் கீழ்ப்பரப்புக்குக் கீழே நீண்டு சென்று இழுவையை அதிகரிக்கிறது

frisket : (அச்சு.) குறுக்குச் சட்டம் : அச்சுக்கலையில் தாள் நிலைத் திருக்க உதவும் குறுக்குப் பட்டைகள் வாய்ந்த மெல்லிய இரும்புச் சட்டம்