பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

fuel level indicator : (தானி.) எரிபொருள் மட்டமானி : எரிபொருள் கலத்திலுள்ள எரிபொருள் அளவினைச் சுட்டிக்காட்டும் சாதனம்

fuel lock : (தானி.) எரிபொருள் அடைப்பு : பார்க்க ஆவியடைப்பு

fuel pump : (தானி.) எரிபொருள் இறைப்பி : எரி-வளி கலப்பி அறைக்குள் எரிபொருளைச் செலுத்துவதற்கு வெற்றிடம் ஏற்படுத்துவதற்கு உந்துதண்டு அல்லது இடையீட்டுத் தகடு மூலம் இயக்கப்படும் ஒரு சாதனம்

fuel-tank vent : (வானூ.) எரிபொருள் கலப்புழை : விமானத்தில் எரிபொருள் கலத்திலிருந்து உபரி எரிபொருளை வெளியேற்றி அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திடப் பயன்படும் ஒரு சிறிய குழாய்

fugitive colours : நிலையற்ற வண்ணம் : ஒளிபட்டால் நிலைத்து நிற்காத வண்ணங்கள்

fulcrum : (எந்.) ஆதாரம் : நெம்பு கோலின் தாங்குநிலை இயக்க ஆதாரம்

full annealing : முழுமையான பதப்படுத்தல் : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் வெப்ப நிலைக்கு அதிகமாகச் சூடாக்கி, ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு அதே வெப்பநிலையில் வைத்திருந்து, பின்னர் மெல்ல மெல்ல ஆறவைத்தல் மூலம் பதப்படுத்துதல்

fuller : இரும்புப் பள்ளம் : இரும்பை உருவாக்கும் கொல்லுலைப் பள்ளம்

fuller faucet : (கம்.) மிடாக் குழாய் : ஒரு மிடாவில் திறப்புக்காக ரப்பர் பந்து உள்ள ஒரு குழாய்

fuller's earth : வண்ணான் காரம் : துணிகளை வெளுப்பதற்குச் சலவையாளர்கள் பயன்படுத்தும் ஒருவகைக் களிமண்

full floating axle : (தானி.) முழு மிதவை அச்சு : இந்த வகையான அச்சில் உந்து வண்டியின் முழுப்பாரம் அடைப்புத்துளையாலேயே தாங்கிக் கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்டதும் அச்சினை இயக்கும் சுழல்தண்டு, சக்கரக் குடத்தின் முடியினால் அதற்குரிய இடத்தில் பொருத்தி வைக்கப்படுகிறது. சுழல் தண்டு அகற்றப்பட்டு, சுழில் தண்டு வெளியே இழுத்து எடுக்கப்படுகிறது. சில உந்து வண்டிகளில் ஒரு வில்வளையும் சக்கரக்குடத்தின் காடியினுள்ளும், சுழல் தண்டின் கொளுவியினுள்ளும் பொருத்தப்படுகிறது. இதனால் குடத்து மூடியில் அச்சு உராய்ந்துவிடாமல் தடுக்கப்படுகிறது

full gilded : முழு மெருகேற்றிய நூல் : மூன்று விளிம்புகளும் மெருகேற்றப்பட்டிருக்கும் நூல்

fulling or milling : கம்பளி வெளுப்பாலை : கம்பளித் துணிகளை வெளுக்கும் ஆலை

full load : (வானூ.) முழுச்சுமை : விமானம் காலியாக இருக்கும் போது எடையுடன் சேர்த்து பயனுறும் எடை. இதனை "மொத்த எடை" என்றும் கூறுவர்

full point : (அச்சு.) முற்றுப் புள்ளி : அச்சுக்கலையில் ஒரு நிறுத்தற் குறியீடு

full size : முழு வடிவளவு ஓவியம் : முழு உருவத்தின் அளவுக்கு வரையப்படும் ஒவியங்கள்

full thread : (எந்) முழுத்திரு கிழை : வேண்டிய ஆழத்திற்குத் துல்லியமாகவும் கூர்மையாகவும்