பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

gable (க.க.) மஞ்சடைப்பு: இறை வாரங்களுக்கு மேலுள்ள புறச்சுவரின் முக்கோணக் கோடி.

gable moulding : (க.க) மஞ்சடைப்பு வார்ப்படம் : ஒரு மஞ்சடைப்பினை முடிவுறுத்துவதற்குப் பயன்படும் வார்ப்படம்.

gable roof : (க.க.) மஞ்சடைப்பு முகடு : ஒரு மஞ்சடைப்பில் முடிவடைகின்ற நீள்வரைக் கூறுகளாயமைந்த கூரை.

gadget : (பொறி.) சிறு பொறி : சிறிய கையடக்கமான கருவி அல்லது சாதனம்.

gaggers : (வார்.) மேற்கட்டி ஆதாரங்கள் : மேற்கட்டியிலுள்ள மணலுக்கு வலுவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உலோக ஆதாரங்கள். தரையில் வார்ப்படங்கள் செய்யத் தொங்கிக் கொண்டிருக்கும் மணற் பொருள்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

gain : (மர.வே.) துளைப் பொருத்து : உத்தரத்தின் முனையைப் பொருத்துவதற்கு மரத்தில் வெட்டப்படும் துளைப்பொருத்து.

galaxy : (விண்.) வான்கங்கை : கோடிக்கணக்கான சூரியன்களும், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்களும், ஒண்மீன் படலங்களும் அடங்கிய வான்கங்கை. பூமியின் சூரியன் இதனைச் சார்ந்தது. இதனை பால்வீதி மண்டலம் என்றும் அழைப்பர்.

galena : (கணி.) கேலினா : ஈயத்தின் மிக முக்கியமான தாதுப் பொருள். இது ஒரு சல்பைடு. இது ஈயமும் கந்தகமும் கலந்த கலவை. இதில் 8.5% ஈயம் கலந்திருக்கும்

gali-bladder : (உடலி) பித்தப்பை : நுரையீரலில் சுரந்து, இரைப்பை கொழுப்புப்பொருள்களைச் சீரணிப்பதற்குப் பயன்படும் பசும்பழுப்பு நிறமுடைய பித்தநீர் என்ற திரவத்தின் கொள்கலன்


gallery : (க.க.) (1) படியடுக்கு மேடை: இருபுறமும் கட்டிட அறை வாயில் பலகணிகளையுடைய இருக்கைப் படியடுக்கு வரிசை மேடை

(2) கலைக்கூடம் : கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கலைக் காட்சிக்கூடம்

galley: (அச்சு.) அச்செழுத்துத் தட்டு: அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.இது மரத்தினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டிருக்கும்

galley lock: (அச்சு) அச்செழுத்துப் பிடிப்பான்: அச்செழுத்துத் தட்டிலிருந்து பார்வைப்படிகள் எடுக்கப்படும் போது, அச்செழுத்துக்களை இறுகப் பிடித்துக் கொள்ளும் ஒரு சாதனம்

galley press: (அச்சு) பார்வைப் படி அச்சு எந்திரம்: பக்கங்கட்டாத அச்சுப் பார்வைப்படிகள் எடுப்பதற்குப் பயன்படும் ஓர் அச்சு எந்திரம். இதில், ஓர் ஆதாரமும், தடத்தில் ஓடும் கனத்த உருளையும் இருக்கும்

galley proof: (அச்சு) அச்சுப் பார்வைப்படி:பக்கங்கட்டாத அச்சுப் பார்வைப்படி

galley rack; (அச்சு) அச்செழுத்துத் தட்டடுக்கு: அச்செழுத்துத்