பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

அழுத்தும் தகட்டுப்பான அச்சு எந்திரத்தில் மிகப் பழைய வகை

gothic (க.க.) கூர்மாடப் பாணி : (1) இடைநிலைக் காலத்து கிழக்கு ஜெர்மனியின் கூர்மாடச் சிற்பப் பாணியில் அமைந்த கட்டிடம்

(2) அச்சுருப் படிவ வகையில் அமைந்துள்ள அச்சுரு

gothic arch : (க.க.) கூர்மாடக் கவான்: உயர்ந்து, குறுகிக் கூர்மையாகச் செல்லும் வில்வளைவு

gouge : நகவுனி : தச்சு வேலையிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளி

governor : (எந்.) ஆள்வான் : எஞ்சின்களிலும், எந்திரங்களிலும் வேகத்தைச் சீராக்கிடும் விசை அமைவு

grab : (எந்.) இறுகுப்பிடிப்பான் : வலித்திழுப்பதற்காகவும்,உயரத்தூக்குவதற்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்

grab hook : (வார்.) இறுகுப்பிடிப்புக் கொக்கி: பாரந்துக்கிக் கொக்கியுடன் பாரங்களை இணைப்பதற்கான குறுகிய சங்கிலிகள் அல்லது சலாகைகளுடன் இணைக்கப்பட்டுள்ள கொக்கிகள்

grade : (க.க) தரைமட்டம் : ஒரு கட்டிடத்தைச் சுற்றியுள்ள தரைமட்டம்

grading : சாய்தள அமைப்பு : (1) ஒரு மனையில் தேவையான கோணத்திற்கு சாய்தளம் ஏற்படுத்துதல்

(2) பக்க நடைபாதையை மழை நீர் சீராக வடியும் வகையில் சாய்வாக அமைத்தல்

gradual load: படிப்படியான பாரம்: ஒரு கட்டமைப்பில் படிப்படியாக ஏற்றப்படும் பாரம். இது அழுத்தத்திற்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தும்

graduate : நுண்படியளவீடு: நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடுதல்

graduation : படியளவுக் குறியீடு : நுண் படியளவிட்டுப் படியளவுக் குறியிடுதல்.

grain : (1) மயிர் களைதல்: தோல் பதனிடுவதில் தோலிலிருந்து மயிர் களைதல்

(2) மயிர் களைவுக் கத்தி : தோல் பதனிடுவதில் மயிர் களைவதற்குப் பயன்படுத்தும் கத்தி

(3) அடுக்குவரி அமைவு : காகித எந்திரத்தில் இயக்கத் திசைக்கு நேரிணையாகக் காகிதத்தில் நீள் வாக்கில் அடுக்கு வரி அமைவுறச் செய்தல்

(4) நெல் மணி எடை: மிகச் சிறிய எடை அளவு. 7,000 மணி எடை = 1 அவுன்ஸ்-பவுண்டு

grained cowhide: மயிர் களைந்த தோல் : தோலில் மயிர்களைந்து, பல்வேறு மேற்கரண் பரப்புடைய தோல். இது பல வண்ணங்களிலும் இருக்கும், இதனால் பைகளும், பெட்டிகளும் செய்யப்படுகிறது

graining: அகவரி வண்ணமிடுதல்: கருவாலி, வாதுமை போன்ற உயர்தர மரங்களைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் அகவரி வண்ணம் கொடுக்கும் முறை

graining comb : (மர.வே) கரண் சீப்பு: மரப்பலகைகளில் கரண் போன்ற தோற்றம் ஏற்படுமாறு செய்வதற்குரிய எஃகினாலான