பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
355

ignition (மின்.) சுடர் மூட்டம் : வாயு எஞ்சின்களில் மின்சுடர் மூலமாகத் தீமூட்டும் ஏற்பாடு

ignition battery : (தானி) சுடர் மூட்ட மின்கலம் : கேசோலின் எஞ்சின்களின் சுடர் மூட்ட அமைப்பிற்கு மின்னோட்டம் பாய்ச்சுவ தற்காகப் பயன்படுத்தப்படும் சேமமின்கலங்களின் அல்லது உலர் மின்கலங்களின் ஒரு தொகுதி

ignition coil: (மின்) சுடர் மூட்டச் சுருள் : உந்து ஊர்தியில் சுடர்ப் பொறித்தாவு மின் முனைகளைத் தாவிச் செல்வதற்கு உயர் மின்னழுத்த மின்னோட்டத்தை உண்டாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்சுருள்

ignition distributor : (தானி;மின்.) சுடர்மூட்டப் பகிர்வான் : உயர்அழுத்தச் சுடர்ப் பொறியை மின்சுருளிலிருந்து சுடர்ப் பொறி தாவு மின்முனைகளுக்குப் பகிர்மானம் செய்வதற்கான காலமுறைப் பகிர்மான நுட்பமுறை

ignition points : (மின்) & சுடர் மூட்டமுனை: மின்னோட்ட முறிப்பானில் சுடர் மூட்டத்திற்கான ஓர் உயர் மின்னழுத்தத்தை உண் டாக்கும் வகையில் சுடர் மூட்டக் கம்பிச்சுருளின் அடிப்படை மின் சுற்றுவழியைத் திறந்துவிடுகிற முனை

ignition spark : (தானி)சுடர் மூட்டப்பொறி: சுடர்மூட்ட மின் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்படும் உயர் அழுத்தச் சுடர்ப் பொறிஅல்லது சுடர். இது சுடர்ப் பொறி தாவு மின்முனைகளுக்குப் பாய்ந்து எஞ்சின் நீள் உருளைகளிலுள்ள வாயுக்களை வெடிக்கச் செய்கிறது

ignition system : (மின்) சுடர் மூட்ட அமைப்பு முறை : ஒரு தானியங்கி எஞ்சினில் உயர் அழுத்த சுடர் மூட்டத்தை உண்டு பண்ணுகிற உறுப்புகளின் முழுமையான தொகுதி

ignition switch : (தானி)சுடர் மூட்டவிசை: சுடர் மூட்டச் சுருளுடனான மின் சுற்று வழியை முற்றுறுத்துகிற அல்லது முறிக்கிற மின்னியல் கட்டுப்பாட்டுக் கருவி

ignition temperature : சுடர் மூட்ட வெப்பநிலை : எரியும் தன்மையுடைய பொருள் அக்சிஜனுடன் விரைவாக வேதியியல் முறையில் இணைவதற்காக எந்த அளவுக்கு உயர்த்தப்பட வேண்டுமோ அந்த அளவு வெப்பநிலை

ignition timer : (தானி) சுடர் மூட்ட நேரப் பதிப்பான்: திறம்பட்ட கனற்சியை உண்டாக்குவதற்கென சுடர் மூட்ட நேரத்தைக் குறிப்பதற்காகப் பயன்படும் ஒரு எந்திர சாதனம்

ignition timer distributor : (தானி.) சுடர்மூட்ட நேரப்பதிவுப் பகிர்வான் : இயக்கி. தடைப்புயம், சுழல் தண்டு, இயக்குச் சக்கரம், எஞ்சினின் இயக்கு சக்கரச் சுற்று வட்ட முன்னப்பிலிருந்து இயங்கும் பல்லிணை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான அமைப்பு. இதன்மூலம், உயர் அழுத்த மின்விசை, அந்தந்த நீள் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்யப்படுகிறது

I-head engine : (தானி.) I-முகப்பு எஞ்சின்: 'ஓரதர் முகப்பு'- என்றும், 'மேல்முகப்பு ஓரதர் இயக்கி' என்றும் இது அழைக்கப்படும்

ileo : (உட.) அடிச் சிறுகுடல்: சிறு குடலை பெருங்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் அடிப்பகுதி

illuminating : (அச்சு) மெருகிவிடு